ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி
தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறக்கப்படுகிறது.