பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 என்கவுண்டர்கள்- 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை <!– பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 எ… –>

ஜம்மு காஷ்மீரில் கடந்த 36 நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாலை ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியைருந்த 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். அவர்களுள் இக்லாக் அகமது (Ikhlaaq Ahmad) என்பவன் கடந்த மாத இறுதியில் போலிஸ் ஹெட் கான்ஸ்டாபிள் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தான். 36 நாட்களில் 13 என்கவுண்டர்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 24 … Read more

இரண்டு இந்தியா கருத்து – ராகுல் காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா கண்டனம்

ராய்பூர்: மத்திய அரசு நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகவும், கோடீஸ்வரர்களுக்காக ஒன்று, கோடிக்கணக்கான சாமானியர்களுக்காக மற்றொன்று என இரண்டு இந்தியா இருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கருத்தை  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, கடுமையாக சாடியுள்ளார்.  ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமை, ஊழல் மற்றும் … Read more

மகனுக்கு கட்சித் தலைவர் பதவியா? அப்படி சொல்றவன் எல்லாம் முட்டாள்கள்: லாலு பிரசாத் யாதவ் ஆவேசம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, முன்பு போல் அவரால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை. அவருடைய இளைய  மகன் தேஜஸ்வி யாதவ்தான், கட்சி பொறுப்புகளை இப்போது கவனித்து வருகிறார்.இந்நிலையில், இக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், கட்சியின் தேசிய தலைவராக லாலுவுக்கு பதிலாக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ‘அப்படி … Read more

'போக்குவரத்து நெரிசலால் 3% விவாகரத்து' – கலாய்க்கப்படும் தேவேந்திர பட்னாவிஸ் மனைவியின் கருத்து

மும்பை: மும்பையில் மூன்று சதவீத விவாகரத்துக்கு காரணம் மாநிலத்தின் டிராஃபிக் மிகுந்த போக்குவரத்து என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி தெரிவித்துள்ளது, வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா பெண் எம்.பி ஒருவரும் அவரை கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ். இவர், வங்கியாளராக பணிபுரிந்துகொண்டே சினிமாவில் பாட்டு பாடுவது, அழகுக்கலைத் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியாகவும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக … Read more

இனி டிஜிட்டல் விவசாயம்தான்.. பிரதமர் மோடி அழைப்பு!

வறுமையில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்றி அவர்களின் வாழ்வை மேம்பட செய்யும் திறன் விவசாயத்துக்கு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “டிஜிட்டல் விவசாயம்தான் இந்தியாவின் எதிர்காலம். இளைஞர்கள் இதற்கு பெருமளவில் பங்களிக்கலாம். அமிர்த காலத்தில் விவசாயத்தின் வளர்ச்சி மூலம் அனைவருக்குமான வளர்ச்சி மீது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்தில் பெண்களுக்கு சுய … Read more

மனைவியர் விற்பனைக்கு களவானித்தனம் செய்த மாடர்ன் காதல் தம்பதியர்.. திகைத்து நிற்கும் போலீஸ்.! <!– மனைவியர் விற்பனைக்கு களவானித்தனம் செய்த மாடர்ன் காதல் தம்… –>

பெங்களூரில் டுவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் தனியாக குழு தொடங்கி, மனைவியரை மாற்றிக் கொள்ளும் வைப் ஸ்வாப்பிங் விபரீதத்தில் ஈடுபட்ட காதல் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். அற்ப ஆசைக்காக மனைவியை கடைபொருளாக்கிவர்கள் கூண்டோடு சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சில மாதங்களுக்கு முன்பு கேரள மா நிலம் கோட்டயம் சங்கனேச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதள குழுக்கள் மூலமாக மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவுடன் தொடர்பில் … Read more

மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

இம்பால்: மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் இம்பால் மேற்கு போலீஸ் கமாண்டோக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு நடத்திய தேடுதல் வேட்டையில்  மூன்று வெவ்வேறு கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் … Read more

‘ஜி 23’ குழுவை சேர்ந்தவர்கள் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மணீஷ் திவாரி, குலாம் நபி நீக்கம்: காங்கிரஸ் தலைமை திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பின் அனந்த்பூர் சாகிப் தொகுதி காங்கிரஸ் எம்பியாக மணீஷ் திவாரி ஆவார். சமீபத்தில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, கட்சியின் 23 … Read more

‘‘வெட்கக்கேடானது’’- பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த தெலங்கானா முதல்வருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத்: பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்த நிலையில், அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கேசிஆரின் செயல் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் வந்தார். ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை … Read more

இந்திய எல்லையில் பாலம் கட்டும் சீனா.. மத்திய அரசு பரபரப்புத் தகவல்!

இந்தியா – சீனா இடையே 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு அதிகாரிகளும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியபிறகும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் நீண்டுகொண்டே போகிறது. இதற்கிடையே, எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் சீனா ஒரு பாலம் கட்டி வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இடத்தில் பாலம் கட்டி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் … Read more