உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த யானை <!– உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்… –>

உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த மின்கம்பியில் 11 கிலோ வோல்ட் என்ற அளவில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., மின்கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொலை

சம்பா: ஐம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லையை தாண்டி போதைப் பொருட்களை கடத்த முயன்ற மூன்று பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் இருந்து பயணித்து, சர்வதேச எல்லையைத் தாண்டி, பிளாஸ்டிக் பைப் மூலம், எல்லை வேலி வழியாக போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக எல்லைப் பாதுகாப்பு படையின் ஜம்மு எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல்  டி.கே.பூரா தெரிவித்துள்ளார்.   கடந்த 10 நாட்களாக போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் குறித்து எங்களுக்கு தகவல் வந்ததாகவும், அதன் … Read more

துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்வர் பினராய்க்கு பாஜ கருப்புக்கொடி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின்னர் கடந்த மாத இறுதியில் அவர் கேரளா திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், திடீரென அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து நேராக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில், நேற்று மதியம் அவர் துபாயில் … Read more

யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் லதா மங்கேஷ்கர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டுச் சென்றுள்ளார் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக, கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி … Read more

1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி <!– 1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி –>

இந்திய கிரிக்கெட் அணி, தனது ஆயிரமாவது போட்டியில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால், மேற்கு இந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் … Read more

பஞ்சாப் முதல் மந்திரி வேட்பாளர் சரண்ஜித் சன்னி – ராகுல் காந்தி அறிவிப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.  காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.   இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி … Read more

மண்டியா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேர் வெட்டி படுகொலை: பணத்துக்காக கொலை நடந்ததா? போலீசார் விசாரணை

மண்டியா: மண்டியா மாவட்டத்தில் குஜராத் மாநிலத்தை குழந்தைகள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கங்காராம், துணி வியாபாரம் செய்து வருகிறார். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் தாலுகாவிலுள்ள கேஆர்எஸ் பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்துள்ளார். துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திற்கு கங்காராம் மற்றும் அவரின் சகோதரர் செல்வது வழக்கமாகும். கடந்த 3 நாள் முன்பு கங்காராம், ஆந்திராவுக்கு … Read more

5 மாநிலத் தேர்தல்: பேரணிகள், வாகனப் பிரச்சாரங்களுக்கு தடை தொடரும்; பொதுக் கூட்டங்களுக்கு தளர்வு: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பேரணிகள், வாகனப் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். ஆனால் அதே வேளையில் உள் அரங்கு, வெளியிடங்களில் அரசியல் கூட்டங்களுக்கு சில தளர்வுகள் உண்டு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் … Read more

பஞ்சாப் தேர்தல் – காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் … Read more

லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் <!– லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் –>

மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஸ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.  பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் … Read more