ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கப்படும்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: ஹிஜாப் தடையால் பெண் கல்வி மேலும் பாதிக்கப்படும் என ஐக்கிய ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்றி வழக்கம்போல் தரிசனம் <!– திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்ற… –>

இன்னும் இரண்டு மாதத்தில் திருப்பதி கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுப் பக்தர்கள் வழக்கம்போல் தரிசிக்க அனுமதிக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர்கள் குழுத் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இந்திரா ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் உட்பட 24 பேர் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பாரெட்டி, தமிழ்நாடு … Read more

நானும் சுயசரிதை எழுதினால் பலரது முகமூடி கிழியும்- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் மற்றும் இங்கு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்க தொடங்கியதை தொடர்ந்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐ.ஏ.எஸ். … Read more

வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ்

திருவனந்தபுரம்: பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர் மறைவு எதிரொலி: உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை தள்ளிவைத்தது பாஜக 

லக்னோ: பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 … Read more

ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகள் சிலவற்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (தலை மறைப்பு துணி) அணிய தடை விதிக்கப்பட்டது. அப்படி அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், “அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் துண்டு அணிந்து வருவோம்” என்று இந்து மாணவிகள் சிலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஹிஜாப் தடையை பாஜக உள்ளிட்ட இந்துத்து அமைப்புகள் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸுடன் இணைந்து, … Read more

அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதி விபத்து… 3 பேர் உயிரிழப்பு <!– அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோத… –>

ஹரியானா மாநிலம் களனூரிலிருந்து ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். லஹ்லி கிராமத்திற்கு அருகே ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிர்புறத்தில் இருந்து வந்த டிராக்டர் டிராலி மீது பலமாக மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்- இந்தியாவின் இசைக்குயில் விடைபெற்றது

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் விடைபெற்றது. 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இசைக்குயிலின் குரல் இன்றுடன் முடிந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண்டிட் தீரநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக பிறந்தார். லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிகல் பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருந்தார். இதனால் தன்னுடைய 4-வது வயதிலேயே தந்தையிடம் … Read more

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிப்பு; இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் … Read more

பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: இன்று மாலை மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

மும்பை: பிரபல பாடகர் லதா மங்கேஷ்கரில் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு … Read more