திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம் கடத்த முயற்சி <!– திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம… –>
திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து கடத்த முயன்ற 10 லட்சம் வங்காளதேச டாக்கா பணத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். வங்காளதேச எல்லையான கோகுல்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், புது வகையான கடத்தலை கண்டறிந்துள்ளனர். பணக் கடத்தல் குறித்து முன்கூட்டியே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், சோதனை செய்ததில் 9 லட்சத்து 97 ஆயிரம் வங்காளதேச டாக்கா பணம் சிக்கியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். Source link