புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட "சேம் சைட் கோல்".. தர்ம சங்கடத்தில் பாஜக..!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் கொடுத்ததாக காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி . ஆனால் இந்த விவாகரத்தில் தெரிந்தோ தெரியாமலோ, சேம் சேட் கோல் போட்டுள்ளார் பிரதமர் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன. அதாவது மத்திய அரசு ரயில்களை விட்டது மட்டும் சரி, ஆனால் அதற்கு டிக்கெட் எடுக்க உதவியது தவறா என்று எதிர்க்கட்சிகள் விளாசியுள்ளன. இந்தியாவைக் கொரோனாவைரஸ் தாக்கி முதல் அலை உருவானபோது நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதா… –>

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி கடந்த 24 மணி நேரத்தில் 1.80 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1188 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மரணங்களின் தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு Source link

திருப்பதியில் ரதசப்தமி விழா: 7 வாகனங்களில் ஏழுமலையான் பவனி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா இன்று அதிகாலை தொடங்கி நடந்து வருகிறது. காலை சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் எழுதருளிகிறார். கொரோனா விதிமுறை முன்னெச்சரிக்கையால் கோவிலுக்குள்ளேயே காட்சி தருகிறார். கோவில் வளாகத்தில் உலா வந்தார். இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், … Read more

பிப்.10ல் சட்டமன்ற தேர்தல்!: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு.. உ.பி.யில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

லக்னோ: நாளை மறுநாள் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளியாக சுயன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். 403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாதி, … Read more

'அப்பட்டமான பொய்': பிரதமர் உரைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்; ட்விட்டரில் வசைபாடும் எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: கரோனா முதல் அலையின் போது டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னது. இதன் விளைவாக, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தராகண்டில் கோவிட் வேகமாக பரவியது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருப்பது அப்பட்டமான பொய் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். முன்னதாக நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “கோவிட்-19 முதல் அலையின்போது காங்கிரஸ் பொறுப்பற்ற … Read more

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனாவின் மூன்றாம் அலை பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. நேரடி வகுப்புகள் ரத்தான நிலையில். மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பின் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து டில்லி தொடங்கி தமிழ்நாடு வரை பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு <!– கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளி… –>

கோவா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார். கடந்த ஞாயிறு அன்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பனாஜியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். Source link

நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியாக உயர்வு

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதன் மூலம் இதுவரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியை கடந்து விட்டது. இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்து … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

தஞ்சை : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அருணாச்சல் பனிச்சரிவில் 7 வீரர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவையும் பொருட்படுத் தாமல் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக உயர்ந்த மலைப்பகுதி யான காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கின. வடகிழக்கு … Read more