அருணாச்சல் பள்ளியில் தண்ணீர் தொட்டி இடிந்து 3 பேர் உயிரிழப்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலம் நாகரலகூன் பகுதியில் உள்ள கிராமத்தில் செயின்ட் அல்போன்சா பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த மேல்நிலை தண்ணீர்த் தொட்டி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 மாணவர்கள் சிக்கி படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி … Read more

உ.பி.யின் சம்பலில் நில ஆக்கிரமிப்பு சோதனையில் 46 வருடமாக மூடியிருந்த ஹனுமன் கோயில் திறப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் மின்சாரத்திருட்டு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு கண்டெடுக்க்பட்ட 46 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹனுமன் கோயில் பூஜைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. உ.பி.யின் சம்பலிலுள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்ட புகாரில் சிக்கியது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்கில் மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி களஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் அதிகமானவர்கள் மீது வழக்குகள் பதிவாகி பலர் கைதாகி … Read more

யார் இந்த ஜக்தீப் தன்கர்? – எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைக்கும் மாநிலங்களவைத் தலைவரின் பின்புலம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி, அவையின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் வழங்கிய நோட்டீஸில், ‘அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க … Read more

நிறுவனங்களோ, தனிநபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு நிச்சயம்: ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: நிறுவனங்களோ அல்லது தனி நபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள ஐசிடபிள்யுஏ-வில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவைகளின் 50வது நிறுவன தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஜக்தீப் தன்கர், “இன்று நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் உரைகள் நிகழ்வது குறைந்துபோனதே காரணம். … Read more

“இரு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவுக்கு வித்திடும்” – ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

புதுடெல்லி: இரண்டு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவையே ஏற்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ல் ரத்து செய்யப்பட்டபோது அந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி … Read more

“சிறுபான்மையினர் உடன் அதிகாரத்தை பகிர யாரும் விரும்புவதில்லை” – நாடாளுமன்றத்தில் ஒவைசி பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது என்று தெரிவித்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி, “யாரும் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை” என்று குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய ஒவைசி, “அரசியலமைப்பு நிர்ணய சபையின்போது, சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களால்தான் சிறையில் இருப்பது போன்று உணர்ந்தேன் என்று மவுலான ஆசாத் கூறியுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் … Read more

“அரசியல் சாசன பாதுகாப்பை பேசுவதன் மூலம் சாவர்க்கரை கேலி செய்கிறது பாஜக” – ராகுல் காந்தி

புதுடெல்லி: அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பது பற்றி பேசும் பாஜக, அதன்மூலம் வீr சாவர்க்கரை கேலி செய்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) உரையாற்றினார். அப்போது, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தவாதியாகக் கருதப்படும் சாவர்க்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தில் எதுவும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மனுஸ்மிருதியை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். … Read more

நிலச்சரிவு பாதிப்பு: வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி கோரி பிரியங்கா காந்தி போராட்டம்

புதுடெல்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மாவட்டத்துக்கு விரைவாக நிதி உதவி வழங்க வலியுறுத்தி வயநாடு தொகுதியின் எம்பியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா தலைமையில் கேரள எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட … Read more

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பின் கீழ் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 97 வயதாகும் அத்வானி, … Read more

‘டெல்லி சலோ’ யாத்திரையை மீண்டும் தொடங்கும் விவசாயிகள்; ஹரியானாவில் இணைய சேவை துண்டிப்பு

சண்டீகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களின் டெல்லி நோக்கி 101 பேர் செல்லும் ஜோடி யாத்திரையை இன்று மதியம் மீண்டும் தொடங்குகின்றனர். இதனை முன்னிட்டு ஹரியானா அரசு அம்மாநிலத்தின் அம்பலா மாவட்டத்தின் 12 கிராமங்களில் டிசம்பர் 17-ம் தேதி வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையை தடைசெய்துள்ளது. கிஷான் மஸ்தூர் மோர்சா (கேஎம்எம்) தலைவர் சர்வான் சிங் பந்தேர், சனிக்கிழமை விவசாயிகள் குழு … Read more