நிலச்சரிவு பாதிப்பு: வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி கோரி பிரியங்கா காந்தி போராட்டம்

புதுடெல்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மாவட்டத்துக்கு விரைவாக நிதி உதவி வழங்க வலியுறுத்தி வயநாடு தொகுதியின் எம்பியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா தலைமையில் கேரள எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட … Read more

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பின் கீழ் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 97 வயதாகும் அத்வானி, … Read more

‘டெல்லி சலோ’ யாத்திரையை மீண்டும் தொடங்கும் விவசாயிகள்; ஹரியானாவில் இணைய சேவை துண்டிப்பு

சண்டீகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களின் டெல்லி நோக்கி 101 பேர் செல்லும் ஜோடி யாத்திரையை இன்று மதியம் மீண்டும் தொடங்குகின்றனர். இதனை முன்னிட்டு ஹரியானா அரசு அம்மாநிலத்தின் அம்பலா மாவட்டத்தின் 12 கிராமங்களில் டிசம்பர் 17-ம் தேதி வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையை தடைசெய்துள்ளது. கிஷான் மஸ்தூர் மோர்சா (கேஎம்எம்) தலைவர் சர்வான் சிங் பந்தேர், சனிக்கிழமை விவசாயிகள் குழு … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா டிச.16-ல் மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா டிச.16-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் … Read more

இதயத்தில் அரசியல் சாசனம் சுமக்கிறோம்: காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்நாத் சிங் பதில்

அரசியல் சாசனத்தை காங்கிரஸார் தங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார். ஆனால் நாங்கள் இதயத்தில் சுமக்கிறோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துப் பேசியதாவது: அரசியல் சாசன உருவாக்கத்தை ஒரு கட்சி எப்போதும் அபகரிக்க முயன்று வருகிறது. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட வரலாறு தொடர்பான இவை அனைத்தும் … Read more

நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் பலன் அளிக்கும்: பிரசாந்த் கிஷோர் கருத்து

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், அது பலன் அளிக்கக்கூடியதுதான்’’ என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சியை எதிர்க்கும் மாநில அரசுகளை குறிவைத்துதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை கொண்டு வரப்படுவதாக ஒரு கருத்து சில அரசியல் கட்சிகளிடம் நிலவுகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரே … Read more

தன்கர் – கார்கே வாக்குவாதம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ​மாநிலங்​கள​வைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்​கட்​சிகளின் இண்டியா கூட்டணி சார்​பில் கடந்த 10-ம் தேதி நம்பிக்கை​யில்லா தீர்​மானம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. மாநிலங்​களவை செகரட்டரி ஜெனரலிடம் அந்தத் தீர்​மானம் வழங்​கப்​பட்​டது. இதற்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்​றனர். இந்நிலை​யில், மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், அவைத் தலைவர் தன்கர் பேசி​ய​தாவது: நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்​கட்​சிகளுக்கு உரிமை உள்ளது. அதேநேரத்​தில் விதி​முறைகளை மீறுகின்​றனர். எழுத்​துப்​பூர்​வமாக நோட்​டீஸ் அளித்த 14 … Read more

பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: விசாரணைக்கு ஆஜராகுமாறு மனைவிக்கு நோட்டீஸ்

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த தனியார் நிறு​வனத்​தில் மேலா​ளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்​து​கொண்​டார். அவர் இறப்​ப​தற்கு முன்பு, 24 பக்கங்​களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்​கும் கடித​மும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவை​யும் வெளி​யிட்​டார். அதில் தன் மனைவி நிகிதா சிங்​காரி​யா​வுடனான விவாகரத்து வழக்​கில் ஜீவனாம்​சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்​புறுத்​தி​யது, தன் 3 வயது மகனை காண்​பிக்​காமல் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.40 ஆயிரம் கோரியது, பொய் வழக்​குகளை … Read more

மகாராஷ்டிராவில் நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

நடைபயிற்சிக்கு தனியாக சென்றதால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கொடுத்தவர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நடைபயிற்சிக்கு தனியாக சென்றார். இதனால் அந்தப் பெண்ணின் 31-வயது கணவர் கோபம் அடைந்தார். இத்தகவலை மாமனாரிடம் போனில் தெரிவித்த கணவர் , முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார். இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். முத்தலாக் … Read more

வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதைப் போல், இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கின்றனவா என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதோடு, பல்வேறு துணைக் கேள்விகளையும் அவர் எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை … Read more