வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதைப் போல், இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கின்றனவா என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதோடு, பல்வேறு துணைக் கேள்விகளையும் அவர் எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.15 … Read more

டெல்லியில் நாளை தலைமைச் செயலர்கள் மாநாடு தொடக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: தலைமைச் செயலர்களின் 4-வது தேசிய மாநாடு புதுடெல்லியில் நாளை கூடுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமைச் செயலர்களின் தேசிய நாடு நடத்தப்பட்டு வருகிறது. முதல் மாநாடு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது … Read more

நடிகர் அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கையும், அரசியல் எதிர்வினைகளும்! – ஒரு விரைவுப் பார்வை

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், “சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று தெலங்கானா முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “சட்டம் அதன் கடமையைச் செய்யும். இந்த வழக்கு விசாரணையில் யாருடைய தலையீடும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கண்டனம்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, அவர் நடத்தப்பட்ட … Read more

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க டிச.15-ல் இந்தியா வருகை

புதுடெல்லி: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க வரும் 15-ம் தேதி இந்தியா வர உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக அநுர குமார திசாநாயக்க இந்தியா வருகை தர உள்ளார். அரசு முறைப் பயணமாக வரும் 15 முதல் 17-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ள அவர், … Read more

ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்: பிரதமர் மோடி

பிரயாக்ராஜ்: ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்தான் கும்பமேளா. இங்கு சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒற்றுமைக்கான மிகப் பெரிய … Read more

‘‘எனது முதல் உரையைவிட சிறப்பாக இருந்தது’’: மக்களவையில் பிரியங்காவின் முதல் உரைக்கு ராகுல் பாராட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியின் எம்பியான பிரியங்கா காந்தி வத்ரா, முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது … Read more

அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக பிரியங்கா காந்தி மக்களவையில் இன்று உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது வீரமரணம் அடைந்த ராணுவ … Read more

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23-ம் ஆண்டு தினம் – உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

புதுடெல்லி: கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு இந்த தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, … Read more

அணு மின்சக்தி உற்பத்தி 2 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2031-ம் ஆண்டுக்குள் மும்மடங்கு அதிகரிக்கும் என அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணு மின்சக்தி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 4,780 மெகா வாட்டாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 8,081 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. 2031-32-ம் ஆண்டுக்குள் நாட்டின் … Read more