அணு மின்சக்தி உற்பத்தி 2 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2031-ம் ஆண்டுக்குள் மும்மடங்கு அதிகரிக்கும் என அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணு மின்சக்தி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 4,780 மெகா வாட்டாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 8,081 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. 2031-32-ம் ஆண்டுக்குள் நாட்டின் … Read more

சாலை விபத்தில் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேர் உயிரிழப்பு: 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்

சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்து குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். வாகன ஓட்டிகள் சட்டத்தைப் பற்றி … Read more

நாடாளு​மன்​றத்​தில் தொடர்ந்து இடையூறு: ‘ஈஷா’ மைய நிறுவனர் சத்குரு வருத்தம்

நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ” உலக ஜனநாயகத்தின் கலங்களை விளக்கமாக நாம் இருக்க விரும்பும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குபவர்கள் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களை அதுபோன்ற சர்ச்சைகளுக்குள்ளும் இழுக்கக்கூடாது. முரண்பாடுகள் … Read more

‘இந்து தமிழ் திசை’ செய்தியின் தாக்கம்: தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அமைச்சர் ஷெகாவாத்திடம் வலியுறுத்தல்

தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அரசிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது: இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கல்வெட்டுப் பிரிவின் மைசூர் கிளையில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தற்போது சென்னை கிளையில் உள்ளன. பல்லாண்டுகளாக டிஜிட்டல் முறையில் ஆவணமாக்கப்படாமல் உள்ளன. இவற்றை டிஜிட்டலாக்கி, ஆய்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் … Read more

இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் போராட்டம்: கர்நாடகாவில் போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சட்டப்பேரவையில் (சுவர்ண சவுதா) குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2ஏ பிரிவில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலசங்கம பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெயமிருதஞ்ஜெய சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஊர்வலமாக‌ சென்ற அவர்கள் சட்டப்பேரவைக்குள் … Read more

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய … Read more

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்க கேஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்தம் உள்ள 70 தொகு​தி​களில் 67 இடங்​களைக் கைப்​பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி​யைக் கைப்​பற்றியது. அதன்​பின் 2020-ம் ஆண்டு தேர்​தலில் 62 இடங்​களில் வென்று ஆட்சி​யைத் தக்க​வைத்​தது. இந்நிலை​யில், அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்​தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி வியூகம் வகுத்​துள்ளது. இதற்​கிடை​யில், காங்​கிரஸ் மற்றும் இண்டியா … Read more

பிரான்ஸுடன் இணைந்து தயாரிக்கும் ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைகிறது

ஸ்கார்பீன் ரகத்தின் 6-வது மற்றும் கடைசி போர்க்கப்பல் மற்றும் நீலகிரி ரகத்தின் முதல் போர்க்கப்பல் ஆகியவை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்த 2 கப்பல்களும் இந்த மாதமே கடற்படையில் சேர்க்கப்பட இருந்ததாகவும் பின்னர் இது தள்ளி வைக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ், ஸ்கார்பீன் ரகத்தைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிகளை வாங்க பிரான்ஸின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்திய கடற்படை கடந்த 2005-ம் ஆண்டு … Read more

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு – பின்னால் இருக்கும் ‘அரசியல்’ எது?

‘வரும்… ஆனா வராது…’ என்ற நகைச்சுவை வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு கச்சிதமாக பொருந்தும், ஆனால் கொஞ்சம் மாறுபட்ட வடிவில். அதாவது, ஒன்றிணைந்த நாளில் இருந்தே ‘இருக்கு, ஆனா இல்லை…’ என்கிற ரீதியில் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பயணித்துக் கொண்டிருக்கிறது இண்டியா கூட்டணி. ஆரம்பம் முதலே நாளொரு சர்ச்சை, பொழுதொரு போட்டி என முரண்பாடுகளுடன் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த இண்டியா கூட்டணியில் இப்போது மீண்டும் ஒரு குழப்பச் சூழல். இந்த முறையும் … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா சமீபத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். இதன்படி நாடாளுமன்ற கூட்டுக் … Read more