காதலனை கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கன்னி​யாகுமரி​யில் வசித்த கேரள பெண் கரீஷ்மா. இவர் கல்லூரி​யில் படிக்​கும்​போது திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற வாலிபரை காதலித்​தார். இந்நிலை​யில் கரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திரு​மணம் நிச்​சய​மானது. காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்​டிக்க விரும்பிய கரீஸ்மா, அவரை கொலை செய்​வது​தான் பிரச்​சினையி​லிருந்து விடு​படு​வதற்கு ஒரே தீர்வு என முடிவு செய்​தார். அவருக்கு குளிர்​பானத்​தில் வலி நிவாரண மாத்​திரை, தூக்க மாத்​திரைகளை கலந்து கொடுத்​தும் பலன் அளிக்க​வில்லை. கடந்த 2022-ம் ஆண்டு … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

காசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை … Read more

நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கும் கும்பமேளா – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: வட​மாநிலங்​களில் நடைபெறும் கும்​பமேளா, தென் மாநிலங்​களில் நடைபெறும் புஷ்கரம் ஆகிய நிகழ்வுகள் சகோதரத்து​வம், நல்லிணக்​கம், ஒற்றுமையை வளர்க்​கின்றன என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார். மாதம்​தோறும் ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான 118-வது நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் உங்களை சந்தித்து வருகிறேன். … Read more

சட்டவிரோதமாக செயல்பட்ட 13 சுரங்கங்களுக்கு சீல்: அசாம் அரசு நடவடிக்கை

அசாமில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சுரங்கங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி எலிவளை சுரங்கம் அமைத்து அவர்கள் நிலக்கரி வெட்டியபோது தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து இதுவரை 4 … Read more

மகா கும்பமேளாவில் வைரலாகும் உத்தராகண்ட் மாநில இளம் துறவி ஹர்சா

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இரு இளம்பெண்களின் புகைப்படம், வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. லியானார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து அழகான இளம்பெண்களை, மோனா லிசா என்று அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இரு இளம்பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவர்களின் புகைப்படம், வீடியோக்கள் சமூக … Read more

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்: 130 விமானங்கள், 27 ரயில்கள் தாமதம்

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்கிறது. இதனால் 130 விமானங்கள் மற்றும் 27 ரயில்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன. தலைநகர் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிமூட்டம் தொடர்கிறது. இதனால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 130 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான சேவையில் தாமதம் ஏற்படுவதால் அது தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை டெல்லி விமான நிலைய … Read more

உறையும் குளிரில் நடைபாதைகளில் தூங்கும் டெல்லி எய்ம்ஸ் நோயாளிகளை சந்தித்த ராகுல் காந்தி

உறையும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகள், உறவினர்கள் தூங்கும் நிலை உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அண்மைக் காலமாக காய்கறி விற்பனையாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். மேலும், அவர்களைச் சந்தித்து உரையாடிய விவரங்களையும், அதற்கான வீடியோ பதிவையும் … Read more

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 2 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து: 18 கூடாரங்கள் சேதம்

பிரயக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ பரவி 18 கூடாரங்கள் சேதமடைந்தன. இது குறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து … Read more

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து: போலீஸ் தகவல்

பிரயக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். என்றாலும் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதுவும் இல்லை. இதுகுறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.” என்றார். … Read more

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். இதன்படி, வரும் ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெற உள்ளது. முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 … Read more