பெண்களுக்கு பம்பர் வருமாய்: மோடி அரசின் அசத்தல் திட்டம்….. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

Mahila Samman Savings Certificate: அக்டோபர் 10, 2024 வரை MSSC திட்டத்தின் கீழ் 43,30,121 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று டிசம்பர் 3 அன்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் அறிவித்தார்

காங்கிரஸ் மீது ஜெ.பி.நட்டா தாக்கு: ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி அமளியால் மாநிலங்களை ஒத்திவைப்பு

புதுடெல்லி: “காங்கிரஸுக்கும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது” என மாநிலங்களவையில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகலுக்கு முந்தை அமர்வுக்கான அலுவல்களுக்கான ஆவணங்கள் வைக்கப்பட்ட பின்பு, அன்றைய அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய ஆறு நோட்டீஸ்களையும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நிராகரிப்பதாக அவைத் … Read more

அம்பேத்கரிய இயக்க முன்னோடி ஜெய்பீம் சிவராஜ் காலமானார்

பெங்களூரு: அம்பேத்கரிய இயக்க முன்னோடியும் சமூக செயற்பாட்டாளருமான ஜெய்பீம் சிவராஜ் (75) உடல் நலக்குறைவால் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் காலமானார். கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை சேர்ந்த ஜெய்பீம் சிவராஜ் (75) சிறுவயது முதலே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சமூக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் பிறந்ததும் அவரது தந்தை மாசிலாமணி இவ‌ருக்கு மணி என பெயர் சூட்டினார். 1954ல் அம்பேத்கர் கோலார் தங்கவயலுக்கு வந்தபோது, மாசிலாமணி தன் மகனை அழைத்துச்சென்று பள்ளியில் சேர்ப்பதற்காக புதிய பெயரை … Read more

கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) பெங்களூருவில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், கன்னட திரையுலகினர், தொழில் துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக அவரது … Read more

அமெரிக்க ஜார்ஜ் சோரஸுடன் நேரு குடும்பத்துக்கு நெருக்கம்: காங்கிரஸ் மீது பாஜக தாக்குதல்

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன், நேரு-காந்தி குடும்பத்துக்கு ஆழமான உறவு உள்ளதாக பாஜக கூறியுள்ளது. ஓசிசிஆர்பி என்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளித்து வருகிறார். இந்த அமைப்பும், ராகுல் காந்தியும் இணைந்து இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியின் புகழை கெடுக்கும் வகையிலான செய்திகளை பரப்புவதாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும் ஆசிய பசிபிக் ஜனநாய தலைவர்கள் கூட்டமைப்பு (எப்டிஎல் -ஏபி) என்ற … Read more

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு!

ராஜஸ்தானில் 150 அடி ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான். ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மாலை 4 மணியவில் அங்கு மீட்புப் பணிகள் தொடங்கின. சிறுவன் 150 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. புல்டோர் … Read more

தாய்வீடு வந்தும் பதிப்பிக்கப்படாத தமிழ் கல்வெட்டுகள் – சென்னையிலிருந்து மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சியா?

மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டுக்களின் மைப்படிகள் தாய்வீடான தமிழகம் வந்த பிறகும் பதிப்பிக்கப்படவில்லை. இதனால் இவற்றை மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டுகள் தலைமைப் பிரிவு, மைசூரில் செயல்படுகிறது. இங்கு சேகரித்து வைக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் வீணாகி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் … Read more

ரூ.2000 மொபைல் செயலி கடனுக்காக மனைவியின் புகைப்படம் மார்பிங்: ஆந்திராவில் கணவர் தற்கொலை

செல்போன் செயலி மூலம் பெற்ற ரூ.2,000 கடனை திருப்பிச் செலுத்தாததால், மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்க்ள், உறவினர்களுக்கு ஏஜெண்ட் அனுப்பி வைத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். செல்போன் செயலிகள் மூலம் அவசரத்துக்கு கடன் வாங்குவோர், ஏஜெண்ட்கள் மூலம் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடன் செயலிகளையும், அதன் அட்டூழியங்களையும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த … Read more

பாரதியார் படைப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி: தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம் என்று புகழாரம் 

புதுடெல்லி: தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக பாரதி​யார் நூல்கள் அமைந்​துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்​டி​னார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதி​யாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளி​யிட்​டார். மகாகவி சுப்​பிரமணிய பாரதி​யின் 143-வது பிறந்​தநாள் விழா நேற்று நாடு முழு​வ​தி​லும் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி தேசியக் கவி பாரதி​யாரின் முழு​மை​யான படைப்பு நூல்​களின் தொகுப்பை 23 பாகங்களாக பிரதமர் நரேந்திர மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார். மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீழ் அமைந்​துள்ள … Read more

5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து நொய்டா பெண்ணிடம் ரூ.1.40 லட்சம் பறித்த கும்பல்

நொய்டா: நொய்டா 77-வது செக்டாரில் வசிக்கும் ஸ்மிருதி செம்வேலை கடந்த 8-ம் தேதி பிரியா சர்மா என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, ஸ்மிருதியின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆட் கடத்தல், போதை கடத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக பிரியா சர்மா கூறியுள்ளார். அதை கேட்டு ஸ்மிருதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர், தொடர்ந்து மிரட்டிய படியே 5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து … Read more