பாரதியார் படைப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி: தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம் என்று புகழாரம் 

புதுடெல்லி: தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக பாரதி​யார் நூல்கள் அமைந்​துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்​டி​னார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதி​யாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளி​யிட்​டார். மகாகவி சுப்​பிரமணிய பாரதி​யின் 143-வது பிறந்​தநாள் விழா நேற்று நாடு முழு​வ​தி​லும் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி தேசியக் கவி பாரதி​யாரின் முழு​மை​யான படைப்பு நூல்​களின் தொகுப்பை 23 பாகங்களாக பிரதமர் நரேந்திர மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார். மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீழ் அமைந்​துள்ள … Read more

5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து நொய்டா பெண்ணிடம் ரூ.1.40 லட்சம் பறித்த கும்பல்

நொய்டா: நொய்டா 77-வது செக்டாரில் வசிக்கும் ஸ்மிருதி செம்வேலை கடந்த 8-ம் தேதி பிரியா சர்மா என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, ஸ்மிருதியின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆட் கடத்தல், போதை கடத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக பிரியா சர்மா கூறியுள்ளார். அதை கேட்டு ஸ்மிருதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர், தொடர்ந்து மிரட்டிய படியே 5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து … Read more

இந்துத்துவா குறித்த சர்ச்சை கருத்து: மெகபூபா மகள் இல்திஜா முப்திக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

‘இந்துத்துவா ஒரு நோய்’ என்று குறிப்பிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இல்திஜா முப்தி கடந்த சனிக்கிழமை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு 3 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கப்படும் ஒரு வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார். அப்பதிவில் அவர், “இந்துத்துவா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்து, கடவுளின் பெயரைக் கெடுக்கும் ஒரு நோய்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். … Read more

‘சம்பல் மசூதி விவகாரத்தில் கொலை மிரட்டல்’ – காவல் நிலையத்தில் இந்து தரப்பு வழக்கறிஞர் புகார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் சம்பல் மசூதி வழக்கு விவகாரத்தில் இந்து தரப்பினரின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவரது புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சம்பலிலுள்ள ஜாமா மசூதி, அங்கிருந்த ஹரிஹரன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதன் மீது சம்பலின் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இதன் நீதிபதி, மசூதியினுள் நவம்பர் 19-இல் … Read more

சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு: தன் மீதான அவதூறு கருத்துகளை நீக்க கோரிக்கை

புதுடெல்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு எதிரான அவதூறான கருத்துக்களை நீக்குமாறும், அவை சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். ஓம் பிர்லா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் சபாநாயகரைச் சந்தித்தேன். என் மீதான அவதூறான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்று எங்கள் கட்சி கூறுகிறது என்று நான் அவரிடம் சொன்னேன். சபாநாயகர் அவற்றை ஆய்வு செய்வதாக கூறினார். அவர்கள் (பாஜக) … Read more

மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ‘அரசியல்’ செய்வது எப்படி? – கார்கே பட்டியலிட்டு விமர்சனம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஏற்படும் அமளிக்கு மிகப் பெரிய காரணமே அதன் தலைவரான ஜக்தீப் தன்கர்தான் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இன்று மதியத்துக்கு முன்பாகவே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, “நாட்டின் துணைக் குடியரசு தலைவர்களாக டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஷங்கர் … Read more

வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

திகா(மேற்கு வங்கம்): வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். ஜெகநாதர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக திகாவுக்குச் சென்றுள்ள மம்தா பானர்ஜி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்குத் திரும்ப விரும்புபவர்கள் அழைத்து வரப்பட வேண்டும்” என்று கூறினார். இந்துக்கள் தாக்கப்படும் வீடியோக்கள் … Read more

‘‘நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி’’ – பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கால வரிசையில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்ட இந்நூல்களை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இவ்விழாவில் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் … Read more

‘மேற்குவங்கத்தில் பாபர் மசூதி கட்டப்படும்’ – திரிணமூல் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். இதன் பணி முர்ஷிதாபாத்தில் வரும் டிசம்பர் 6, 2025 இல் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்ட அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த நவம்பர் 9, 2019 … Read more

ஜக்தீப் தன்கர் நீக்க தீர்மானம்; ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தால் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை காலை 11 மணிக்குக் கூடியதை அடுத்து சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எம்பிக்களும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு இடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா … Read more