‘மேற்குவங்கத்தில் பாபர் மசூதி கட்டப்படும்’ – திரிணமூல் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். இதன் பணி முர்ஷிதாபாத்தில் வரும் டிசம்பர் 6, 2025 இல் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்ட அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த நவம்பர் 9, 2019 … Read more

ஜக்தீப் தன்கர் நீக்க தீர்மானம்; ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தால் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை காலை 11 மணிக்குக் கூடியதை அடுத்து சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எம்பிக்களும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு இடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா … Read more

பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ, தேசியக் கொடி பரிசளிப்பு: இண்டியா கூட்டணி எம்பி.,க்கள் நூதன போராட்டம்

புதுடெல்லி: அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்தனர். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் … Read more

‘தேர்தலை தனித்தே எதிர்கொள்வோம்’ – காங்., கூட்டணி சலசலப்புகளுக்கு இடையே கேஜ்ரிவால் உறுதி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஜ்ரிவால் தனித்துப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தைக் கொண்டு தனித்து தேர்தலை … Read more

கிராமங்களில் கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கல்வியறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்திரி கூறியதாவது: கிராமங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் கடந்த 2011-ம் ஆண்டில் 67.77 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் ஆண்டில் 77.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் இதே காலத்தில் 57.93 சதவீதத்திலிருந்து 70.4 %-ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற ஆண்களின் சதவீதமும் 77.15 சதவீதத்திலிருந்து 84.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க சமக்ர சிக்ஷா திட்டம், சாக்ஸர் … Read more

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தபோது எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து மின்னணு … Read more

ஆஸ்திரேலிய வாழ் இந்தியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.6.5 கோடி சுருட்டல்

ஆஸ்திரேலிய வாழ் இந்தியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.6.5 கோடியை வங்கி அதிகாரிகளே சுருட்டிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பேகம்பேட்டையிலுள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் பரிதோஷ் உபாத்யாய் என்ற ஆஸ்திரிலிய வாழ் இந்தியர் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் தனது ஹைதராபாத் வங்கிக் கணக்கில் ரூ.6.5 கோடி வைத்திருந்தார். இதனை அவர் பல ஆண்டுகளாக எவ்வித பண பரிவர்த்தனையும் செய்யாமல் … Read more

55% ட்ரோன்களை அழிக்கும் திறன் வாய்ந்த உள்நாட்டு துப்பாக்கிகள்: அமித் ஷா பெருமிதம்

உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிஎஸ்எப் எனப்படும் எல்லையோரப் பாதுகாப்பு படையின் 60-வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. மொத்தம், 2.65 லட்சம் வீரர்கள் உள்ள இந்த படைப் பிரிவு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா … Read more

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.11) கேரளா செல்கிறார். அங்கு தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கேரள மாநில திமுக ஏற்பாடு செய்துள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், கோயில் நுழைவு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தில் பங்கேற்று பெற்ற வெற்றியை நினைவு கூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு … Read more

சைபர் கிரிமினல் கும்பலின் மோசடி முயற்சியை முறியடித்த மும்பை பெண்

மும்பை: மும்பை கிழக்கு போரிவெலி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நவம்பர் 8-ம் தேதி வாட்ஸ்-அப் அழைப்பு வந்துள்ளது. அதில் போலீஸ் உடையில் இருந்த ஒருவர், தன்னை மும்பை காவல் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் ஆதார் என்ணை கேட்டுப் பெற்றுள்ளார். பிறகு ரூ.2 கோடி முறைகேடு வழக்கில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் வங்கிக் கணக்கு விவரத்தை தருமாறு அந்த … Read more