“மக்களவை செயல்பட அனுமதிக்க மறுப்பது அரசின் உத்தி” – பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் பாஜக மக்களவையை செயல்பட அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, “அவையை நடத்த அரசு விரும்பவில்லை அல்லது அவர்கள் அவையை நடத்தத் தகுதியற்றவர்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியே எங்கள் போராட்டம் காலை 10:30 மணி முதல் 11 மணி வரை நடக்கும். பின்னர் நாங்கள் … Read more

ரூ.10 லட்சம் வரை காப்பீடு… மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் – குஷியில் ஆட்டோ டிரைவர்கள்

5 Announcements For Auto Drivers: ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு, அவர்களின் மகள் திருமணத்திற்கு உதவித்தொகை என அரவிந்த் கெஜ்ரிவால் 5 வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளார்.

மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி முடிவு

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. மாநிலங்களவையை மிகவும் ஒரு சார்பாக நடத்தும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இது மிகவும் … Read more

இண்டியா கூட்டணிக்கு தலைமை | மம்தாவின் விருப்பத்துக்கு லாலு ஆதரவும், கட்சிகளின் எதிர்வினையும்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரைப் போலவே பிறகூட்டணிக் கட்சிகளும் மம்தாவின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்பதற்கான தனது விருப்பதை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா வெளிப்படுத்திய நிலையில் லாலு பிரசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு … Read more

ஓய்வுபெறும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: பிரதமர், நிதியமைச்சருக்கு உருக்கமாக நன்றி!

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், “ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இன்று நான் ஓய்வுபெற இருக்கிறேன். ஆதரவையும், வாழ்த்துகளையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, வழிகாட்டி, … Read more

4 முறை எம்எல்ஏவானார் ஜெர்மனி குடிமகன்: அபராதம் விதித்தது ஹைதராபாத் நீதிமன்றம்

இந்தியர் என போலி சான்றிதழ் கொடுத்து தெலங்கானா மாநிலத்தில் ஜெர்மனி வாழ் இந்தியரான வேமுலவாடா சென்னமனேனி ரமேஷ் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சென்னமனேனி ரமேஷ் என்பவர் தெலங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசியல்வாதியாக உள்ளார். இவர் ஜெர்மனி வாழ் இந்தியர் ஆவார். ஆனால், போலி சான்றிதழ் கொடுத்து, இவர் கடந்த 2009-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வேமுலவாடா தொகுதியில் … Read more

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து மோதி 4 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

மும்பை: மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர். மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அஃப்ரீன் ஷா (19), அனம் ஷேக் (20), சிவம் கஷ்யப் (18) மற்றும் கனீஷ் கத்ரி (55) என அடையாளம் … Read more

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (டிச.10) 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 1932-ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில் பிறந்தவர். உள்நாடு மற்றும் … Read more

நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு

நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​தி​லும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்​கி​யுள்​ளனர். இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பயனர்​களின் பயன்​பாட்டை மேம்​படுத்து​வதற்​கும் தொழில்​நுட்ப முன்னேற்​றங்​களுடன் … Read more

“சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும்” – விஎச்பி நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பேசியது என்ன?

இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டார். பொது சிவில் சட்ட அவசியம் குறித்து அவர் உரையாற்றினார். பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன் சட்டப்பிரிவு சார்பில் உ.பி.யின் அலகாபாத் உயர் … Read more