கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (டிச.10) 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 1932-ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில் பிறந்தவர். உள்நாடு மற்றும் … Read more

நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு

நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​தி​லும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்​கி​யுள்​ளனர். இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பயனர்​களின் பயன்​பாட்டை மேம்​படுத்து​வதற்​கும் தொழில்​நுட்ப முன்னேற்​றங்​களுடன் … Read more

“சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும்” – விஎச்பி நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பேசியது என்ன?

இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டார். பொது சிவில் சட்ட அவசியம் குறித்து அவர் உரையாற்றினார். பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன் சட்டப்பிரிவு சார்பில் உ.பி.யின் அலகாபாத் உயர் … Read more

மணிப்பூர் வன்முறையில் எரிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் இனக் கலவரத்தில் எரிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைத்தேயி, குகி சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் கலவரமாக மாறியதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதற்கிடையில் மணிப்பூர் … Read more

மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெரிகிறது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உலகளாவிய முதலீடு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் தெளிவாக காணமுடிகிறது. மிக நெருக்கடியான காலகட்டத்திலும், வலுவாக செயல்படக்கூடிய பொருளாதாரம்தான் இன்றைய உலகத்துக்கு தேவை. இதற்கு, இந்தியாவில் மிகப் பெரிய உற்பத்தி தளம் தேவை. டிஜிட்டல் தொழில்நுட்பம் … Read more

கேரள பாதிரியார் கார்டினலாக நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: புனித போப் பிரான்சிஸ் அவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் நியமிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி. இது, இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம், பெருமையாகும். இயேசுவின் தீவிர சீடராக விளங்கும் அவர் மனித குல சேவைக்கு … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை கார் மேற்கூரையில் கொண்டு சென்ற அக்கா

டேராடூன்: உத்தராகண்டில், ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை வாடகை காரின் மேற்கூரையில் வைத்து அவரது அக்கா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்டின் பித்தோரகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் பிரசாத். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வயது முதுமை காரணமாக கோவிந்த் பிரசாத் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மூத்த மகள் ஷிவானி, உத்தராகண்டின் ஹால்டுகார் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது … Read more

விஎச்பி நிகழ்வில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பங்கேற்று உரை – ஒவைசி கடும் விமர்சனம்

புதுடெல்லி: இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டதை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமானஅசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதோடு, ‘வெறுப்பு மற்றும் வன்முறை சக்தி’ என்று கூறி, வல்லபாய் படேல் தடை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையது. இத்தகைய அமைப்பின் மாநாட்டில் உயர் … Read more

‘உ.பி.யின் மீரட்டில் 5 ஆண்டில் 500 பேர் மதமாற்றம்’ – இந்து அமைப்பினர் புகாரில் 15 பேர் கைது

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் கடந்த 5 வருடங்களாக 500 பேர் மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இங்குள்ள இந்துத்துவா அமைப்பினரின் தகவலின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரட்டின் பர்தாபார் பகுதியிலுள்ள ஜானி காவல் நிலையப் பகுதியான சங்கர்நகரில் வினித் எனும் பாதிரியார் வசித்து வருகிறார். இவர், தன் குடியிருப்பினுள் ஒரு தேவாலயப் பிரார்த்தனைக்காக ஒரு பெரிய ஹாலைக் கட்டியுள்ளார். இந்த தேவாலயத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமக்கள் வருவது உண்டு. இவர்கள் தங்களது … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை, இப்பதவியில் நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் … Read more