ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை, இப்பதவியில் நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் … Read more

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

புதுடெல்லி: தலைநகர் தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ – மிரட்டல் மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே … Read more

ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… ஒன்றிணையும் இந்தியா கூட்டணி – என்ன காரணம்?

No Confidence Motion: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது. 

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 2-வது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அடுத்தாண்டு … Read more

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25 தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக மத்திய … Read more

ஜிஎஸ்டி வரிகளை நீக்க விவசாய பிரதிநிதிகள் வேண்டுகோள்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பாரதிய கிஸான் சங்கத்தின் பொதுச் செuலாளர் பத்ரி நாராயண் சவுத்ரி பேசுகையில், “பி.எம். கிஸான் திட்டப் பலன்களை அதிகரிக்க வேண்டும்” என்றார். பாரதிய கிஸான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் பேசும் போது, “விவசாயத் துக்கு தீவனம், உரம், விதைகள். கருவிகள், மருந்துகள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் … Read more

திருமலை ஆனந்த நிலையத்துக்கு தங்கம் வழங்கியவர்களுக்கு சலுகை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிரகம் உட்பட தங்க விமான கோபுரத்தின் கீழே உள்ள சுவர்கள் முழுவதும் வேலூர் பொற்கோயில் போன்று தங்க தகடுகள் பொருத்த வேண்டும் என 2008-ல் அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். இதற்கு அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கத்தை நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு வந்ததும் பலர் கிலோ கணக்கில் தங்கத்தை ஏழுமலையான் … Read more

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக பந்தய சேவல் ரூ.3 லட்சம் வரை விற்பனை

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்காக பந்தய சேவல் விற்பனை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு சேவலும் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்க தொடங்கி உள்ளது. ஆந்திராவில் பொங்கல் பண்டிகை வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் களை கட்டுவது வழக்கம். இதற்கு இந்த ஆண்டும் விதி விலக்கல்ல எனும் வகையில் இப்போதே சேவல் விற்பனை தொடங்கிவிட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக … Read more

சம்பல் வீடியோவை பார்த்து போலீஸாரை பாராட்டிய மனைவிக்கு ‘தலாக்’ சொல்லிய கணவன்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த முஸ்லிம் தம்பதி இஜாசுல் -நிதா. சம்பல் வன்முறை தொடர்பான வீடியோவை பார்த்த நிதா கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் எடுத்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் இஜாசுல் மூன்று முறை தலாக் சொல்லி நிதாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய மொழியில் தலாக் என்றால் விவாகரத்து என்று அர்த்தம். இதுகுறித்து புர்கா அணிந்தபடி செய்தியாளர்களிடம் நிதா கூறியதாவது: … Read more

உத்தராகண்ட்டில் குளிர்கால சார்தாம் யாத்திரை ஏற்பாடு

உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர்கால சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது என்றும், இது உத்தராகண்ட் மாநில சுற்றுலாவில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். கேதார்நாத் கோயிலில் நேற்றுமுன்தினம் வழிபாடு நடத்திய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை குளிர்கால புனித பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்கள், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான் ருத்ரபிரயாக்கில் தங்கியிருந்து … Read more