சம்பல் வீடியோவை பார்த்து போலீஸாரை பாராட்டிய மனைவிக்கு ‘தலாக்’ சொல்லிய கணவன்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த முஸ்லிம் தம்பதி இஜாசுல் -நிதா. சம்பல் வன்முறை தொடர்பான வீடியோவை பார்த்த நிதா கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் எடுத்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் இஜாசுல் மூன்று முறை தலாக் சொல்லி நிதாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய மொழியில் தலாக் என்றால் விவாகரத்து என்று அர்த்தம். இதுகுறித்து புர்கா அணிந்தபடி செய்தியாளர்களிடம் நிதா கூறியதாவது: … Read more

உத்தராகண்ட்டில் குளிர்கால சார்தாம் யாத்திரை ஏற்பாடு

உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர்கால சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது என்றும், இது உத்தராகண்ட் மாநில சுற்றுலாவில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். கேதார்நாத் கோயிலில் நேற்றுமுன்தினம் வழிபாடு நடத்திய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை குளிர்கால புனித பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்கள், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான் ருத்ரபிரயாக்கில் தங்கியிருந்து … Read more

வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவ வேண்டும்: தன்னார்வலர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அகமதாபாத்: வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் (பிஏபிஎஸ்) சன்ஸ்தா (ஆன்மிக அமைப்பு) சார்பில் கார்யகர் சுவர்ன மஹோத்சவ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: இந்திய கலாச்சாரத்தில் சேவை … Read more

பெட்ரோல் பங்கில் பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிய மர்ம நபர்

போபால்: மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மச்சல்பூர் மாவட்டம் சோயத் கலன் – சுஜால்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஊழியர்கள் தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் … Read more

ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சித்த பாஜக எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன், சபாநாயகருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஹிபி ஈடன் எழுதிய கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிக மோசமான துரோகி என மக்களவை உறுப்பினரான சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது ராகுல் … Read more

போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிப்பு: 25 ஆண்டுகளுக்குப் பின் மும்பை திரும்பிய நடிகை மம்தா குல்கர்னி

மும்பை: போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி (வயது 52) மும்பைக்கு திரும்பியுள்ளார். கரண் அர்ஜுன் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் முதன்முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டுக்குச் சென்றார். தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இயக்கியிருந்தார். … Read more

வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் 15 பயணிகளை காப்பாற்றிய ஜீப் டிரைவர்

ஆரா: வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுன் ஜீப்பை இயக்கிய டிரைவர், அதில் பயணித்த 15 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங். அந்தப் பகுதியில் வாடகை ஜீப் வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று ஜாவூன் கிராமத்திலிருந்து 15 பயணிகளை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையில் அவரது ஜீப்பை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 … Read more

அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்

புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கீர்த்தி ஆசாத் எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த 2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரையிலான காலத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக 519 இந்தியர்கள் தங்கியிருந்தனர். இதுதொடர்பாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி, … Read more

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரஸை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இண்டியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், … Read more

மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்: கண்ணீர் புகை வீசி தடுத்த போலீஸார்

புதுடெல்லி: இரண்டு நாள் இடைநிறுத்தத்துக்கு பின்பு 101 பேர் அடங்கிய விவசாயிகள் குழு ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி சலோ பேரணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கினர். பேரணி தொடங்கிச் சென்ற சில மீட்டர் தூரத்திலேயே ஹரியானா போலீஸார் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. விவசாயிகளைக் கலைக்க போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை … Read more