அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்

புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கீர்த்தி ஆசாத் எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த 2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரையிலான காலத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக 519 இந்தியர்கள் தங்கியிருந்தனர். இதுதொடர்பாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி, … Read more

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரஸை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இண்டியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், … Read more

மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்: கண்ணீர் புகை வீசி தடுத்த போலீஸார்

புதுடெல்லி: இரண்டு நாள் இடைநிறுத்தத்துக்கு பின்பு 101 பேர் அடங்கிய விவசாயிகள் குழு ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி சலோ பேரணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கினர். பேரணி தொடங்கிச் சென்ற சில மீட்டர் தூரத்திலேயே ஹரியானா போலீஸார் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. விவசாயிகளைக் கலைக்க போலீஸார் மீண்டும் கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை … Read more

மகாராஷ்டிரா பேரவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவின் நர்வேகர் வேட்புமனு தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்காக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த சட்டப்பேரவையிலும் நர்வேகரே சபாநாயகராக இருந்தார். நர்வேகர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே, மூத்த பாஜக தலைவர் சந்திரகாந்த் பாடீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு திங்கள்கிழமை தேர்தல் நடக்க இருக்கிறது. … Read more

“அவர் ஒரு திறமையான தலைவர்” – மம்தாவின் இண்டியா கூட்டணி தலைமை விருப்பத்துக்கு சரத் பவார் ஆதரவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் என்ற மேற்குவங்க முதல்வர் மம்தாவின் விருப்பத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். கோலாப்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவாரிடம் மம்தாவின் இண்டியா கூட்டணிக்கான தலைமை விருப்பம் பற்றி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த சரத் பவார், “நாட்டில் உள்ள திறமையான தலைவர்களில் அவரும் ஒருவர். அதனைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவர் அனுப்பியிருக்கும் எம்பிக்கள் கடின … Read more

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து மூலம் அளித்த பதிலில், “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை” என கூறியுள்ளார். மற்றொரு துணை கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “அரசியலமைப்பின் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கர், அரசியலமைப்பு நிர்ணய சபையில் இது தொடர்பான விதிமுறையை … Read more

பிரதமர் மோடிக்கு இமாம் வேண்டுகோள்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 1656-ம் ஆண்டில் கட்டப்பட்ட ஜாமா மசூதி அமைந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின்போது இமாம் சையது அகமது புகாரி கூறியதாவது: சில சமூகவிரோதிகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) தீர்வு காண வேண்டும். முஸ்லிம்களிடம் பேசுங்கள். அவர்களின் மனதின் குரலை கேளுங்கள். அவர்களது மனதில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும். இந்து – முஸ்லிம், கோயில்- மசூதி … Read more

உ.பி.யின் முசாபர் நகர் மசூதிக்கு எதிராக வழக்கு: பாகிஸ்தான் முதல் பிரதமர் பெயரில் இருப்பதால் சர்ச்சை

புதுடெல்லி: உ.பி. முசாபர் நகர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சஜாத் அலிகான் என்பவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இவர், பாகிஸ்தான் முதல் பிரதமர் லியாகத் அலிகானின் சகோதரர். இவர்கள் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர், அங்கிருந்த ருஸ்தம் அலிகான் என்பவர் பெயருக்கு நிலம் பெயர் மாற்றப்பட்டது. இவரும் பாகிஸ்தானுக்கு சென்று விட்டார். இந்நிலையில், யாருடைய பயன்பாட்டிலும் இல்லாத அந்த நிலத்தில் அப்பகுதி மக்கள் மசூதி கட்டி தொழுகை நடத்துகின்றனர். இந்த மசூதி பாகிஸ்தானின் முதல் … Read more

ரஷ்யாவில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்: ஐஎன்எஸ் துஷில் நாளை கடற்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் தல்வார், தேக் மற்றும் கிர்விக் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிர்விக்-3 போர்க் கப்பலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக ‘துஷில்’ போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் ஜேஎஸ்சி ரோசோ போரோன் எக்ஸ்போர்ட் மற்றும் இந்திய கடற்படை, இந்திய அரசுடன் இந்த ஒப்பந்தம் … Read more

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது 12-ம் தேதி விசாரணை

புதுடெல்லி: வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கடந்த 1991-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அரசியல் சாசனத்தின் … Read more