பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து: போலீஸ் தகவல்
பிரயக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். என்றாலும் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதுவும் இல்லை. இதுகுறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.” என்றார். … Read more