ரஷ்யாவில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்: ஐஎன்எஸ் துஷில் நாளை கடற்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் தல்வார், தேக் மற்றும் கிர்விக் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிர்விக்-3 போர்க் கப்பலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக ‘துஷில்’ போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் ஜேஎஸ்சி ரோசோ போரோன் எக்ஸ்போர்ட் மற்றும் இந்திய கடற்படை, இந்திய அரசுடன் இந்த ஒப்பந்தம் … Read more

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது 12-ம் தேதி விசாரணை

புதுடெல்லி: வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கடந்த 1991-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அரசியல் சாசனத்தின் … Read more

மகாராஷ்டிர பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 3 நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்காமல் வெளிநடப்பு செய்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றியது. கடந்த 5-ம் தேதி … Read more

டெல்லியில் தொழிலதிபர் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

புதுடெல்லி: டெல்லியின் ஷாதாராவில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 52 வயது தொழிலதிபர் ஒருவரை மர்ம நபர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாத்திர வியாபாரம் செய்து வந்த சுனில் ஜெயின் என்பவர், யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் இருந்து தனது நடைபயிற்சியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஃபர்ஷா பகுதியில் வைத்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சுனிலை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். … Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகள் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்து உள்ளது. கடந்த 2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்தார். கடந்த 2021 அக்டோபரில் அஜித் பவார், அவரது மனைவி, மகன் மற்றும் … Read more

எஸ் 400 ஏவுகணை, உதிரிபாகம் விநியோகத்தில் தாமதம்: ரஷ்யாவிடம் கேள்வி எழுப்ப இந்தியா முடிவு

புதுடெல்லி: எஸ் 400 ஏவுகணை மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் விநியோகத்தில் ரஷ்யா தாமதிப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ரூ.40,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்தது. இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் 380 கி.மீ தொலைவில் இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்தவை. இந்தியாவுக்கு, ரஷ்யா இதுவரை … Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

புதுடெல்லி: “இந்தியாவின் மக்கள் தொகையில் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, கவலையளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது” என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த மருத்துவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் மக்கள் தொகையில் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த விஷயம் கவலையளிக்க கூடிய … Read more

சிரியாவில் கிளர்ச்சிப் படையால் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: சிரியாவில் தலைநகரை நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள சுமார் 90 இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அதிபர் பஷார் அல்-ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் … Read more

மகா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது சமாஜ்வாதி – பாபர் மசூதி இடிப்பு குறித்த சிவசேனா பதிவால் அதிருப்தி

மும்பை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு தெரிவித்து உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர் வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பின் 32-வது ஆண்டு நினைவுநாளில் உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் பேரவையின் மேலவை உறுப்பினர் மிலிந்த் நர்வேகர், … Read more

போப் ஃபிரான்சிஸ் 2025-க்கு பிறகு இந்தியா வருகை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கத்தோலிக்க திருச்சபையால் ஜூபிலி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2025-ம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் ஃபிரான்சிஸின் இந்திய வருகை இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” போப் பிரான்சிஸுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரடியாக போப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். வாடிகன் தேவாலயம், 2025-ம் ஆண்டை … Read more