மகா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது சமாஜ்வாதி – பாபர் மசூதி இடிப்பு குறித்த சிவசேனா பதிவால் அதிருப்தி

மும்பை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு தெரிவித்து உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர் வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பின் 32-வது ஆண்டு நினைவுநாளில் உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் பேரவையின் மேலவை உறுப்பினர் மிலிந்த் நர்வேகர், … Read more

போப் ஃபிரான்சிஸ் 2025-க்கு பிறகு இந்தியா வருகை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கத்தோலிக்க திருச்சபையால் ஜூபிலி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2025-ம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் ஃபிரான்சிஸின் இந்திய வருகை இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” போப் பிரான்சிஸுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரடியாக போப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். வாடிகன் தேவாலயம், 2025-ம் ஆண்டை … Read more

கார் வாங்கும் கனவு இருந்தா மறந்துருங்க! தாறுமாறாக ஏறிய விலைகள்!

இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.

புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா, 28 நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் 28 நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் 28 புதிய நவோதயா பள்ளிகள் ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை பகுதிகளில் இவை ஏற்படுத்தப்படும். இந்த முயற்சியானது, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய … Read more

விலகும் சமாஜ்வாதி… அதிர்ச்சியில் எதிர்க்கட்சி கூட்டணி – காரணம் யார் தெரியுமா?

National News Latest Updates: எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம். 

ஃபட்னாவிஸ் அரசில் உள்துறையை வசமாக்க விரும்பும் ஏக்நாத் ஷிண்டே – காரணம் என்ன?

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசில் மிகவும் முக்கியமான உள்துறையை தங்களின் தலைவர் கேட்பதாக அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், மகாயுதி கூட்டணியின் மூன்று தலைவர்களும் இலாகா ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இது குறித்து, ஷிண்டேவின் சிவசேனா அணியைச் சேர்ந்த ராய்கத் தொகுதி எம்எல்ஏ கூறுகையில், “தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக இருந்தபோது (முந்தைய ஷிண்டே தலைமையிலான அரசில்) அவர் உள்துறையை கையில் வைத்திருந்தார். … Read more

தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் மூழ்கி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், யாதாத்ரி போங்க்ரி மாவட்டத்தின், ஜலால்பூர் என்ற கிராமத்துக்கு அருகில் இன்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏரிக்குள் பாய்ந்து மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் வசித்து வந்துள்ளனர், விபத்து நடந்தபோது அவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னிரவில் தங்களின் வீடுகளில் இருந்து கிளம்பிய அவர்கள், கள் குடிப்பதற்காக இன்று அதிகாலையில் ஜலால்பூர் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் … Read more

கூகுள் மேப் சொன்ன வழி.. கோவாவுக்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பம்

புதுடெல்லி: பிஹாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று, தவறுதலாக கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பிஹாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் … Read more

முன்னாள் சிலி அதிபர் பேச்லெட்டுக்கு இந்திரா காந்தி அமைதி பரிசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு … Read more

மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை நீட்டித்து வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அவை தொடங்குவதற்கு முன்பாகவே தங்களது எதிர்ப்பை … Read more