கூகுள் மேப் சொன்ன வழி.. கோவாவுக்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பம்

புதுடெல்லி: பிஹாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று, தவறுதலாக கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பிஹாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் … Read more

முன்னாள் சிலி அதிபர் பேச்லெட்டுக்கு இந்திரா காந்தி அமைதி பரிசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு … Read more

மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை நீட்டித்து வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அவை தொடங்குவதற்கு முன்பாகவே தங்களது எதிர்ப்பை … Read more

பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் … Read more

பெங்களூருவில் மடாதிபதி சிலை அவமதிப்பு: இயேசு சொன்னதாக பிடிபட்டவர் வாக்குமூலம்

பெங்களூரு: கர்நாடகாவில் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்ட லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019-ம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவில் தார் பூசி அவமதிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் உணவு டெலிவரி ஊழியர் ஸ்ரீகிருஷ்ணா (33) என்பவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி, உணவு டெலிவரி … Read more

புஷ்பா-2 திரைப்பட நெரிசலில் சிக்கி பெண் இறந்த விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகெங்கிலும் வெளியானது. முன்னதாக புதன்கிழமை இரவு இப்படத்தின் பிரிமியர் ஷோக்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல திரையரங்களில் நடந்தன. இதில் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடந்த பிரிமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் இத்திரையங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு … Read more

பல்லடத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் துப்பு துலக்குவதில் போலீஸார் திணறல்: தமிழகத்தில் மீண்டும் பாவரியா கொள்ளை கும்பல் கைவரிசையா?

புதுடெல்லி: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் … Read more

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா தம்பதியினர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களவையில் துணை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிவராஜ் சிங் சவுகான், “விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும் என்பதை உங்கள் (அவைத் தலைவர்) மூலம் நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். … Read more

“இது பாஜகவின் தந்திரம்…” – ‘அபிஷேக் சிங்வி இருக்கையில் பணக்கட்டு’ சர்ச்சையில் காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி: “மாநிலங்களவையில் அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு எடுக்கப்பட்டதாக கூறுவது மக்களின் கவனத்தை திசை திருப்பும், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளின் விவாதத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் தந்திரம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம். நாங்கள் எழுப்பும் விவசாயிகள் … Read more