பல்லடத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் துப்பு துலக்குவதில் போலீஸார் திணறல்: தமிழகத்தில் மீண்டும் பாவரியா கொள்ளை கும்பல் கைவரிசையா?

புதுடெல்லி: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் … Read more

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா தம்பதியினர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களவையில் துணை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிவராஜ் சிங் சவுகான், “விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும் என்பதை உங்கள் (அவைத் தலைவர்) மூலம் நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். … Read more

“இது பாஜகவின் தந்திரம்…” – ‘அபிஷேக் சிங்வி இருக்கையில் பணக்கட்டு’ சர்ச்சையில் காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி: “மாநிலங்களவையில் அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு எடுக்கப்பட்டதாக கூறுவது மக்களின் கவனத்தை திசை திருப்பும், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளின் விவாதத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் தந்திரம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம். நாங்கள் எழுப்பும் விவசாயிகள் … Read more

ராஜஸ்தான் கோயில் உண்டியலில் 1 கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்!

சித்தோகர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு கோயிலில் ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தியுள்ள செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர் மாவட்டத்தில் சன்வாலியா சேத் என்ற புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் நிரம்பிய நிலையில் அண்மையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த ரொக்கம், நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட், ரூ.23 … Read more

அசாம் போலவே ஒடிசாவிலும் உணவகம், பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு

புதுடெல்லி: அசாம் மாநிலத்தைப் போல், பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க ஒடிசா அரசும் முடிவு செய்துள்ளது. அசாமின் புதிய விதிகளின்படி உணவு விடுதிகள், ஆன்மிகம், திருமணங்கள் உள்ளிட்ட பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அம்மாநில பாஜக தலைவரும், முதல்வருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் புதன்கிழமை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘இன்று முதல் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பண்டிகை மற்றும் மக்கள் … Read more

கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம் – ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம்

புதுடெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் இன்று மதியம் தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் … Read more

என் சகோதரனை பற்றி பெருமைப்படுகிறேன்; அவருக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை: பிரியங்கா

புதுடெல்லி: ராகுல் காந்தி நாட்டிற்கு ஆபத்தானவர்; துரோகி என பாஜக எம்பிக்கள் லக்ஷமண் மற்றும் சம்பித் பத்ரா குற்றம் சாட்டிய நிலையில், தனது சகோதரரை நினைத்து பெருமைப்படுவதாகவும், நாட்டைவிட அவருக்கு மேலானது எதுவுமில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், … Read more

மாநிலங்களவையில் காங். எம்.பி சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கண்டெடுப்பு: பாஜக அமளி

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222ல் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று நேற்று (டிச. 5) கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. 500 ரூபாய் … Read more

முதல்வர் பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன்: ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன் என துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். பதவியேற்புக்குப் பிறகு தானே நகரில் உள்ள சிவசேனா தலைமையகமான ஆனந்த் ஆசிரமத்திற்கு ஏக்நாத் ஷிண்டே வருகை தந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, “நான் முதல்வராக இருந்த காலம் மிகவும் வெற்றிகரமானது. … Read more