முதல்வர் பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன்: ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன் என துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். பதவியேற்புக்குப் பிறகு தானே நகரில் உள்ள சிவசேனா தலைமையகமான ஆனந்த் ஆசிரமத்திற்கு ஏக்நாத் ஷிண்டே வருகை தந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, “நான் முதல்வராக இருந்த காலம் மிகவும் வெற்றிகரமானது. … Read more