தாக்குதலில் உயிர் தப்பிய மறுநாள் குருத்வாராவில் சுக்பிர் பாதல் சேவை

சண்டிகர்: பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல் செய்த தவறுகளுக்காக அவருக்கு சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தக்த் தண்டனை வழங்கியது. இதன்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் சுக்பிர் சிங் பாதல் நேற்று முன்தினம் சேவை செய்தார். அப்போது காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக சுக்பிர் பாதல் உயிர் தப்பினார். இந்நிலையில் … Read more

மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே!

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்க உள்ள நிலையில் அவருடன் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவிறே்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கூட்டணி சார்பில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பாரா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், தற்போது அவரும் அஜித் … Read more

ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

புதுடெல்லி: சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) … Read more

“ராகுல் ஒரு துரோகி…” – நாட்டை சிதைக்க முயல்வதாக பாஜக எம்.பி.க்கள் சாடல்

புதுடெல்லி: சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மிக உயர்ந்த துரோகி என பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் லட்சுமண் மற்றும் சம்பத் பத்ரா ஆகியோர் வியாழக்கிழமை ஒரு பிரச்சினையை எழுப்பினர். பிரான்ஸ் ஊடகம் ‘மீடியா பார்ட்’-ல் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்கள் கூறும்போது, “ஓசிசிஆர்பி ( குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்) என்ற புலனாய்வு ஊடக அமைப்பு, பல நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் … Read more

டெல்லி செல்லும் போராட்டம் – ‘ஜோடி பேரணி’யை தொடங்கும் பஞ்சாப் விவசாயிகள்!

ஷம்பு: டெல்லி செல்லும் போராட்டத்தை தொடங்கிய விவசாய சங்க தலைவர்களிடம், ஷம்பு எல்லையில் பஞ்சாப் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ‘ஜோடி’ பேரணியை தொடங்க பஞ்சாப் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் – … Read more

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்ததும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், … Read more

கொல்கத்தாவில் கொடூரம்! 7 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

கொல்கத்தாவில் எந்தவொரு அடிப்படை வசதியில்லாத குடும்ப தம்பதியின் 7மாத குழந்தைக்கு நடந்த கொடூர பாலியல் சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குறித்து விரிவாக இங்குப் பார்ப்போம்.  

உற்பத்தியை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு

புபனேஸ்வர்: பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் வேளாண் உற்பத்தியை பாதித்து வரும் நிலையில், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய முக்கிய பொறுப்பு வேளாண் விஞ்ஞானிகளுக்கு உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (டிச. 5) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான … Read more

ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: ஹேமந்த் சோரன் அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. பாஜக 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா … Read more

“ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது; மீண்டும் அவர் முதல்வராக மாட்டார்” – சஞ்சய் ராவத்

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என பட்னாவிஸ் … Read more