ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: ஹேமந்த் சோரன் அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. பாஜக 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா … Read more

“ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது; மீண்டும் அவர் முதல்வராக மாட்டார்” – சஞ்சய் ராவத்

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என பட்னாவிஸ் … Read more

சொந்த குடும்பத்தையே படுகொலை செய்த 20 வயது இளைஞர்! உறைய வைக்கும் சம்பவம்..

Delhi Family Murder : தன் சொந்த குடும்பத்தையே, 20 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.   

கடற்படைக்கு த்ரிஷ்டி-10 ட்ரோன் விநியோகித்தது அதானி நிறுவனம்

ஹதராபாத்: இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகித்துள்ளது. ராணுவத் தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் திருஷ்டி-10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான (ட்ரோன்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் ட்ரோன் இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது டிரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது. இந்நிலையில் 3-வதாக தயாரித்த ட்ரோனை, கடற்படைக்கு இரண்டாவது முறையாக வழங்கியுள்ளது. … Read more

நில முறைகேடு வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்க துறை: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தி வருகிறார். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்த இடத்தை கையகப்படுத்தியதற்காக‌ மைசூரு மாந‌கர மேம்பாட்டு கழகம் மாற்று நிலம் ஒதுக்கீடு செய்தது. இதில் முறைக்கேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால் லோக் ஆயுக்தா … Read more

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சிறப்பு சலுகை – அமைச்சர் விளக்கம்

Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம்

டிசம்பர் 3ம் தேதி முக்கியமான நாள். உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மாற்றுத்திறனாளிகளின் துணிவு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு இந்தியாவுக்குப் புனித நாள் போன்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பண்பாட்டில் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது. நமது வேதங்களிலும், நாட்டுப்புற கதை,பாடல்களிலும் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கான மரியாதை உணர்வு பொதிந்துள்ளது. மனதில் உற்சாகம் கொண்டவனுக்கு உலகில் முடியாதது எதுவுமே இல்லை … Read more

மும்பையில் இன்று பிரம்மாண்ட விழா: முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்

மும்பை: பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை நேற்று அவர் வழங்கினார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளிடையே முதல்வர், துணை முதல்வர் பதவிகள், அமைச்சரவை … Read more

13,000 ஆராய்ச்சி இதழ்களை இலவசமாக படிக்க ஜனவரியில் மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்!

புதுடெல்லி: “மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும்” என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘ஒரே நாடு ஒரே சந்தா’ (ஓஎன்ஓஎஸ்) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2025, 2026, 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 13,000 இதழ்களை உயர்க் கல்வி பயிலும் … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று காலை 7.27 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஜெக்கைய்யா பேட்டை, நந்திகாமா, ஏலூருவிலும் தெலங்கானாவில் ஹைதராபாத், கம்மம், ரங்காரெட்டி, வாரங்கல், கரீம்நகர், ஜனகாமா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலை 7.27 மணிக்கு தீடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3 நொடிகள் வரை நீடித்த இந்த நில நடுக்கத்தால் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் கீழே … Read more