13,000 ஆராய்ச்சி இதழ்களை இலவசமாக படிக்க ஜனவரியில் மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்!

புதுடெல்லி: “மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும்” என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘ஒரே நாடு ஒரே சந்தா’ (ஓஎன்ஓஎஸ்) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2025, 2026, 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 13,000 இதழ்களை உயர்க் கல்வி பயிலும் … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று காலை 7.27 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஜெக்கைய்யா பேட்டை, நந்திகாமா, ஏலூருவிலும் தெலங்கானாவில் ஹைதராபாத், கம்மம், ரங்காரெட்டி, வாரங்கல், கரீம்நகர், ஜனகாமா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலை 7.27 மணிக்கு தீடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3 நொடிகள் வரை நீடித்த இந்த நில நடுக்கத்தால் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் கீழே … Read more

கடற்படையின் அர்ப்பணிப்பு நாட்டின் பாதுகாப்பு செழிப்பை உறுதி செய்கிறது: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: கடற்படையின் அர்ப்பணிப்பு உணர்வால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு உறுதி செய்யப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பினை ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது கடற்படை வீரர்களுக்கு இந்த கடற்படை தினத்தில் வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான் நமது தேசம் பாதுகாப்புடனும், செழுமையுடனும் … Read more

ராணுவ மேம்பாட்டுக்காக ரூ.21,772 கோடி மதிப்பிலான 5 திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

புதுடெல்லி: ராணுவத்தில் ரூ.21,772 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் 5 நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது. கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த அதிவேக படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கொள்ளை தடுப்பு பணிகளுக்கும் இந்த விரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்படும். மேலும் கடலோர பகுதிகளில் போர்க்கப்பல்களுக்கு … Read more

ஜெகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த அதிகாரி பணியிடை நீக்கம்

அமராவதி: ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு வழக்கில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது குற்றப் புலனாய்வு துறையின் (சிஐடி) இயக்குநராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், அம்மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு நிதியை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சஞ்சய் தற்போது ஆந்திர மாநிலத்தின் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் துறையின் இயக்குநராக உள்ளார். மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் … Read more

சிவன் கோயிலை இடித்து கட்டியதா பதான்யூ மசூதி? – இந்து மகா சபா வழக்கில் டிச.10-ல் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சம்பலைப் போன்றே, பதான்யூ மசூதி மீதும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவன் கோயில் மீது இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, இந்து மகா சபாவினரின் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்குக்குப் பின் அவரது மருமகனான ஷம்ஸி இல்துமிஷ் என்பவர் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது வட மாநில பகுதிகளில் முஸ்லிம்களுக்கான … Read more

“தாதாவுக்கு அனுபவம் உண்டு…” – அஜித் பவாரை ஜாலியாக கலாய்த்த ஏக்நாத் ஷிண்டே

மும்பை: “காலையிலும் மாலையிலும் பதவியேற்று தாதாவுக்கு (அஜித் பவாருக்கு) அனுபவம் உண்டு” என்று பவார் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டே அடித்த ஜாலியான கமென்ட், கூட்டணித் தலைவர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் கூட்டாக சென்று புதிய அரசு அமைக்க புதன்கிழமை உரிமை கோரிய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர், ஆசாத் … Read more

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் – ‘முன்னாள் பயங்கரவாதி’ கைது

அம்ரித்சர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் ஒரு முன்னாள் பயங்கரவாதி என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஷிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று … Read more

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக நாளை பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், மும்பையில் இன்று கூடிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முன்னாள் முதல்வரும் மத்திய பார்வையாளருமான விஜய் ரூபானி … Read more

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” – ராகுல் ஆவேசம்

காசியாபாத்: “சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து … Read more