துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் – ‘முன்னாள் பயங்கரவாதி’ கைது

அம்ரித்சர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் ஒரு முன்னாள் பயங்கரவாதி என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஷிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று … Read more

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக நாளை பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், மும்பையில் இன்று கூடிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முன்னாள் முதல்வரும் மத்திய பார்வையாளருமான விஜய் ரூபானி … Read more

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” – ராகுல் ஆவேசம்

காசியாபாத்: “சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து … Read more

எடுத்த சபதத்தை முடித்துக்காட்டிய மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

“நான் ஒரு பெருங்கடல், நான் மீண்டு வருவேன்” என்று அன்று எடுத்த சபதத்தை இன்று நிறைவேற்றி இருக்கிறார் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். தாக்கரேக்களின் தாக்கத்தை தாண்டி, மகாராஷ்டிர அரசியல் களத்தில் அவர் வெற்றிக் கொடி நாட்டிய பயணம் வியக்கத்தக்கது. அதை சற்றே விரிவாகப் பார்ப்போம். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக, … Read more

உ.பி.யின் சம்பல் நகருக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீஸ்!

காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதிக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி … Read more

முதல்வராகும் தேவேந்திர ஃபட்னாவிஸ்… மகாராஷ்டிராவில் பரபரப்பு – ஏக்நாத் ஷிண்டேவின் கதி என்ன?

Maharashtra Chief Minister Devendra Fadnavis: மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் வென்ற வெளிநாட்டு குடிமகனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லையா?

புதுடெல்லி: குடியுரிமை குறித்து குற்றம்சாட்ட முடியாத ஆதாரங்கள் இருந்தபோதிலும், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வெளிநாட்டவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டா அல்லது இல்லையா என்ற சட்ட கேள்வியை உச்ச நீதிமன்ற விசாரணையின்போது பிஹார் தேர்தல் ஆணையம் எழுப்பியுள்ளது. பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்டு ராய் எனும் பிலத் ராய் என்ற பிலத் பிரசாத் யாதவ். 2006-07-ல் நேபாள குடிமகனாக இருந்த அவரிடம் 1996 அக்டோபர் 25 முதல் 2006 அக்டோபர் … Read more

“விவசாயிகளின் பொறுமையை சோதித்தால்…” – மத்திய அமைச்சரை மேடையிலேயே எச்சரித்த குடியரசு துணைத் தலைவர்

மும்பை: நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மேடையிலேயே மத்திய விவசாயத் துறை அமைச்சரை எச்சரித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர். மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று (டிச.03) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து … Read more

7 பேரை கொன்ற லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

புதுடெல்லி: 6 தொழிலாளர்கள், டாக்டரை கொன்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுனாயித் அகமது பட். இவர் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். கஹாங்கீர், கந்தர்பால் பகுதியில் 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் இவரை போலீஸார் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று கந்தர்பால் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் … Read more

ராகுல் உட்பட 6 காங். எம்.பி.க்கள் சம்பல் பகுதிக்கு இன்று பயணம்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சமீபத்திய வன்முறையை தொடர்ந்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பயணம் மேற்கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சம்பல் வன்முறை, … Read more