அம்பேத்கர் விவகாரம் | அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இதன் மூலம் நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். மாநிலங்களவையில் நடத்தை விதிகள் விதி 188ன் கீழ் உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷாவுக்கு எதிராக … Read more

CGHS முக்கிய அப்டேட்: ஓய்வூதியதாரர்களின் மருத்துவ உதவித்தொகை அதிகரிக்கிறதா?

Pensioners Latest News: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் (MoHFW), நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கெள்வி எழுப்பினார். 

அமித் ஷா பேச்சு: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி போராட்டம்

புதுடெல்லி: அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பாஜகவும் இன்று (டிச.19) காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது. பாஜக எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திரண்ட பாஜக எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி … Read more

நாடாளுமன்றத்தில் மோதல்! ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டார்.. பாஜக புகார்!

Parliament Latest News In Tamil: காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல். எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டதால், கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியு உள்ளார்.

‘அமித் ஷாவின் பேச்சு பாஜகவின் பழைய மனப்பான்மையின் வெளிப்பாடு’ – அம்பேத்கர் பேரன் கருத்து

புதுடெல்லி: அமித் ஷாவின் பேச்சு பாஜகவின் பழைய மனப்பான்மையின் வெளிப்பாடு என அம்பேத்கரின் பேரன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட்

Lok Sabha Latest News: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆந்திராவில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று

நெல்லூரில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொற்று என்பது கொசுக்களால் ஏற்படும் தொற்றாகும். இதனால் மூளை மற்றும் கண் பார்வை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்பினி பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு தலை மிக சிறியதாகவும், கண் பார்வைத்திறன் குன்றியும் பிறக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மர்ரிபாடு மண்டலம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 6 … Read more

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் பட்னாவிஸை சந்தித்து உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை, சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது வீர சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் கோரிக்கையை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று முன்தினம் … Read more

மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: ​மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதி​ய​தில் 13 பேர் உயிரிழந்​தனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகே​யுள்ள எலிபென்டா தீவில் புகழ்​பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்​வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்​கரையி​லிருந்து படகு​களில் செல்வது வழக்​கம். சுற்றுலா பயணிகள் 100-க்​கும் மேற்​பட்​டோருடன், நீல்​கமல் என்ற படகு மும்​பை​யின் கேட்வே ஆப் … Read more

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசி​யதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்தன. அரசி​யலமைப்பு உருவாக்​கப்​பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் … Read more