புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100% அமல்: ஜனநாயகத்தை பலப்படுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம்

சண்டிகர்: ஜனநாயகத்தின் அடிப்படையை பலப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100% அமலுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார். நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சி சட்டம் (ஐஇஏ) ஆகிய சட்டங்கள் அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாட்சிய அதினியம் (பிஎஸ்பி) ஆகிய புதிய … Read more

வங்கதேசத்தவருக்கு உணவு வழங்க திரிபுரா ஓட்டல் சங்கத்தினர் மறுப்பு

அகர்தலா: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து, வங்கதேசத்தவர்களுக்கு உணவு வழங்க திரிபுரா ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள இஸ்கான் கோயில் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கைக் கண்டித்து, அந்நாட்டிலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுபோல திரிபுரா … Read more

இந்திய – சீன உறவில் முன்னேற்றம்: மக்களவையில் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: சீனாவுடனான இந்தியாவின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, “இந்திய – சீன உறவில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சினையை தீர்க்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளிடையே, எல்லைப் பகுதிகளை நிர்வாகம் செய்வதில் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க … Read more

“சம்பல் வன்முறை திட்டமிட்ட சதி” – மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சம்பல் வன்முறைச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். வன்முறை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 30 பேர் கைது … Read more

நாடாளுமன்றத்தில் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பிய இண்டியா கூட்டணி!

புதுடெல்லி: மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் மக்களவையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிநடப்பு செய்தனர். கடந்த நவம்பர் 25-ம் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் நிலவரம் ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரண்டு அவைகளிலும் அலுவல் நடைபெறாமல் … Read more

ஒரு ரூபாயை கூட ஒதுக்காத மத்திய அரசு – காலியாக இருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி… அதிர்ச்சி!

SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

கேரளாவில் அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு

ஆலப்புழா: கேரளாவில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களில், முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் திங்கள்கிழமை இரவு ஒரே காரில் திரைப்படம் பார்க்க சென்றனர். விடுதியில் இருந்து ஆலப்புழா டவுனில் உள்ள திரையரங்குக்கு அவர்கள் சென்றபோது பலத்த … Read more

கர்நாடகாவில் தொடரும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்ததையடுத்து அங்கு 10 மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக மாறிய ஃபெஞ்சல் புயலால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று (டிச.02) கனமழை கொட்டித் தீர்த்தது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறு மாலை தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் பெய்தது. இதனையடுத்து அடுத்த 2 நாட்களுக்கு கர்நாடகாவில் … Read more

தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்க: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் குறித்த செய்திகள் வருத்தமளிக்கின்றன. இந்த துயரத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களுடைய உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்வந்து நிவாரணப் பணிகளில் … Read more

சீக்கிய அமைப்பு விதித்த தண்டனையை ஏற்று கழிப்பறையை சுத்தம் செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்

புதுடெல்லி: ஷிரோமணி அகாலி தள் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் பாத்திரங்களை கழுவி, கழிப்பறையை சுத்தம் செய்தனர். பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய … Read more