கர்நாடகாவில் தொடரும் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்ததையடுத்து அங்கு 10 மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக மாறிய ஃபெஞ்சல் புயலால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று (டிச.02) கனமழை கொட்டித் தீர்த்தது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறு மாலை தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் பெய்தது. இதனையடுத்து அடுத்த 2 நாட்களுக்கு கர்நாடகாவில் … Read more

தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்க: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் குறித்த செய்திகள் வருத்தமளிக்கின்றன. இந்த துயரத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களுடைய உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்வந்து நிவாரணப் பணிகளில் … Read more

சீக்கிய அமைப்பு விதித்த தண்டனையை ஏற்று கழிப்பறையை சுத்தம் செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்

புதுடெல்லி: ஷிரோமணி அகாலி தள் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் பாத்திரங்களை கழுவி, கழிப்பறையை சுத்தம் செய்தனர். பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய … Read more

தமிழகத்துக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர் பாலு, “ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் புயல் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய துயரை சந்தித்துள்ளனர். சுமார் … Read more

டிச.4-ல் நடைபெறுகிறது மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம்

மும்பை: மகாராஷ்டிர முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நாளை (டிசம். 4) நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. எனினும், புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரபூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை … Read more

இராணுவ ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் 723 காலியிடங்கள் 10th,12th படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியா முழுவதும் எம். டி. எஸ், அலுவலக உதவியாளர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 723 பணியிடங்களை நிரப்ப உங்களுக்கு இந்திய இராணுவ படையில் வாய்ப்பு தேடிவந்துள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் இராணுவத்தில் நீங்களும் ஒருவராக இருக்க இதனைப் பயன்படுத்தவும். மேலும் இதற்கான கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.  

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: கடற்படை தளபதி தினேஷ் குமார் தகவல்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்று கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கடற்படைக்காக 62 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கியை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிதாக ஒரு போர்க்கப்பல் கடற்படையில் … Read more

சம்பல் பகுதியை பார்வையிட சென்ற காங்கிரஸார் – போலீஸார் தள்ளுமுள்ளு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பலில் ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்யச் சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், வன்முறை பாதித்த சம்பல் … Read more

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து வங்கதேசத்தவருக்கு சிகிச்சை தர மேற்கு வங்க மருத்துவர்கள் மறுப்பு

கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனை களில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், சிலிகுரியைச் … Read more

அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்

புதுடெல்லி: அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ஸ்ரீகிருஷ்ண தேவராயலு … Read more