இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து வங்கதேசத்தவருக்கு சிகிச்சை தர மேற்கு வங்க மருத்துவர்கள் மறுப்பு

கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனை களில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், சிலிகுரியைச் … Read more

அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்

புதுடெல்லி: அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ஸ்ரீகிருஷ்ண தேவராயலு … Read more

24 மணி நேரத்துக்கு பின் மான்செஸ்டர் புறப்பட்ட இந்திய விமானம்

புதுடெல்லி: தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தியர்கள் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு கல்ஃப் ஏர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 60 இந்தியர்கள் உட்பட பலர் பயணித்தனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.34 மணிக்கு விமானம் குவைத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்பட்டுச் சென்றது. … Read more

ஜன. 13 முதல் பிப். 26 வரை மகா கும்பமேளா: 40 கோடி பக்தர்களை வரவேற்க தயாராகிறது பிரயாக்ராஜ்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்களை வரவேற்க அந்நகரம் தயாராகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதுதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை … Read more

இவிஎம் இயந்திரம் குறித்து வீடியோ வெளியிட்டு மாயமான சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு

மும்பை: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சையது சுஜா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) தன்னால் முறைகேடு செய்ய முடியும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி (சிஇஓ) … Read more

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். படத்தை பார்வையிட வருகை தந்த பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் மோடி இப்படத்தைப் பார்த்தார். கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா … Read more

அரசியல் என்பது ‘திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல்’ – மத்திய அமைச்சர் கட்கரி

நாக்பூர்: அரசியல் என்பது திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல்; அங்கு ஒவ்வொரு நபரும் தற்போதைய பதவியை விட உயர்ந்த பதவிக்காக ஆசைப்படுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ’50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “அரசியல் என்பது திருப்தி அற்ற ஆன்மாக்களின் கடல். இங்கே ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள். கவுன்சிலராக இருக்கக் கூடியவருக்கு எம்எல்ஏ-வாக … Read more

“முஸ்லிம்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்துங்கள்” – ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சம்பல் பகுதியில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகளை மத்திய அரசு நிறுத்த … Read more

மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் கூட்டம்: மத்திய பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி நியமனம்

புதுடெல்லி: மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்துக்கு மத்திய பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகாராஷ்டிராவில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகரின் கட்சிப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தண்ணீர் பாட்டில்கள்… அதிக ஆபத்துள்ள உணவு வகை… FSSAI திடீர் முடிவு

FSSAI Drinking Water:  FSSAI தற்போது பாட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை ‘அதிக ஆபத்துள்ள உணவு வகை’ என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது.