மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் கூட்டம்: மத்திய பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி நியமனம்

புதுடெல்லி: மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்துக்கு மத்திய பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகாராஷ்டிராவில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகரின் கட்சிப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தண்ணீர் பாட்டில்கள்… அதிக ஆபத்துள்ள உணவு வகை… FSSAI திடீர் முடிவு

FSSAI Drinking Water:  FSSAI தற்போது பாட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை ‘அதிக ஆபத்துள்ள உணவு வகை’ என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. 

மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பெயர் தேர்வு என தகவல்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் முறைப்படி அவர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், “மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டிசம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் … Read more

‘‘இடையூறு விளைவிக்காதீர்கள்’’ – டெல்லி அருகே போராடும் விவசாயிகள் தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி அருகே பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் போராட்டங்களை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும், 2020-21ல் இருந்து நடந்து வரும் போராட்டங்களின் போது … Read more

மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச. 2, 2024) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பலரிடம் போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கச் செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது. … Read more

அதானி, மணிப்பூர் விவகாரம் | எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. திறன் மேம்பாடு தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்தார். அதேநேரம், எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி, மணிப்பூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீதி வேண்டும், நீதி வேண்டும் என … Read more

நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு

நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இப்போது விசாகப்பட்டினம், மர்மகோவா, நியு மங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா முனையங்கள் உள்ளன. நீர்வழி சுற்றுலா திட்டத்தின் மூலம் வரும் 2029-ம் ஆண்டுக்குள் 10 … Read more

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் மோசடி: ஆடைகளை களைய செய்து கொடூரம்

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் ரூ.1.8 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார். அதோடு வீடியோ காலில் அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து கொடூமைப்படுத்தி உள்ளார். ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, … Read more

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்​தது. இதன் காரணமாக புதுச்​சேரி மற்றும் அதனை சுற்றி​யுள்ள தமிழகப் பகுதி​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. … Read more

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே தகவல்

மும்பை: ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. தற்போது மகாராஷ்டிர முதல்​வராக ஏக்நாத் ஷிண்​டே, துணை முதல்​வர்​களாக தேவேந்திர பட்னா​விஸ், அஜித் பவார் பதவி வகிக்​கின்​றனர். இந்த சூழலில், புதிய முதல்​வராக தேவேந்திர பட்னா​விஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்​துள்ளதாக கூறப்​படு​கிறது. இதற்கு … Read more