எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளில் பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) உருவாக்கப்பட்டது. மத்திய ஆயுதப்படையான இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. … Read more