கேரள மாநில ஓய்வூதிய திட்டத்தில் மோசடி: பயனாளி பட்டியலில் சொகுசு கார் உரிமையாளர்

திருவனந்தபுரம்: கணவரை இழந்த பெண்​கள், ஆதரவற்ற மூத்த குடிமக்​கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிவுற்ற பிரி​வினருக்கு கேரள அரசு சார்​பில் மாதம் ரூ.1,600 ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில நிதித் துறை சார்​பில் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் பல்வேறு முறை​கேடுகள் அம்பல​மாகி உள்ளன. இதுகுறித்து கேரள நிதித் துறை வட்டாரங்கள் கூறிய​தாவது: கேரளா​வின் கோட்​டக்கல் பகுதியில் 42 பேருக்கு ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது. இதில் ஒரு பயனாளி பல ஆண்டு​களுக்கு முன்பே உயிரிழந்​து​விட்​டார். ஆனால் அவரது … Read more

மணிப்பூர் வன்முறை: தீவிரவாதிகள் 4 பேர் கைது

இம்பால்: மணிப்​பூர் வன்முறை தொடர்பாக சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்​திருந்த 4 தீவிர​வா​திகளை போலீ​ஸார் கைது செய்​துள்ளனர். மணிப்​பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி பழங்​குடி​யினர் மற்றும் மைத்​தேயி சமூகத்​தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்​தது. அம்மாநிலத்​தில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் தொடர்​கிறது. இந்நிலை​யில் போலீ​ஸார் நேற்று கூறிய​தாவது: சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்​திருத்தல் மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக மக்கள் போர்ப்​படையை சேர்ந்த 4 தீவிர​வா​திகள் கடந்த வியாழக்​கிழமை கைது செய்​யப்​பட்​டனர். … Read more

டிஆர்டிஓ ரகசிய ஆவணங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனமான டிஆர்டிஓ-வின் ரகசிய ஆவணங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் அம்ரிதா எக்கா. இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். இவரது கணவர் பிரான்சிஸ் எக்கா. இந்நிலையில் டார்ஜிலிங் பகுதியில் பிரான்சிஸ் எக்காவின் வீட்டில், டிஆர்டிஓ ரகசிய ஆவணங்கள், கோடிக்கணக்கான ரேடியோ கதிர்வீச்சு கருவிகளுடன் பிடிபட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் … Read more

குஜராத்தின் சூரத் பகுதியில் குப்பையை எரித்து குளிர்காய்ந்த சிறுமிகள் 3 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்த 3 சிறுமிகள் விஷ வாயு காரணமாக உயிரிழந்தனர். குஜராத்தின் சூரத் நகரில் உள்ளது சச்சின் பகுதி. இங்குள்ள பாலி கிராமத்தில் 5 சிறுமிகள், வயல் பகுதியில் குப்பையை குவித்து தீ வைத்து, அதன் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் இருந்து நச்சு புகை வெளியேறியது. அதை சுவாசித்தும் அவர்கள் வாந்தி எடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். … Read more

முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு

கர்னூல்: ஆந்திர மாநிலத்​தில் ஒய்.எஸ்​. ஆர் காங்​கிரஸ் கட்சி​யின் ஆட்சி காலத்​தில் சுமார் இரண்டரை ஆண்டு​காலம் நகரி தொகுதி எம்.எல்​.ஏவான ரோஜா சுற்றுலா, இளைஞர் மேம்​பாட்டு துறை அமைச்​சராக பணியாற்றினார். அப்போது ரோஜா, 2023 பிப்​ரவரி மாதம் பாபட்லா மாவட்​டம், சூர்​யலங்கா பகுதி​யில் கட்டப்​பட்​டுள்ள சுற்றுலா துறைக்கு சொந்​தமான ரிசார்ட்களை ஆய்வு செய்​தார். அப்போது அவர் தனது செருப்பை கழற்றி வைத்து விட்டு, கடலோரமாக அதிகாரி​களுடன் பேசிக்​கொண்டே நடந்து சென்​றார். அப்போது தனது செருப்பை பார்த்து கொள்​ளும்படி … Read more

உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் சம்பலில் இருந்த கல்வி அவதாரக் கோயிலை இடித்து​விட்டு ஜாமா மசூதி கட்டப்​பட்​டதாக புகார் எழுந்​துள்ளது. இது தொடர்பான வழக்கை விசா​ரித்த நீதி​மன்றம் பிறப்​பித்த உத்தர​வின்​படி, மசூதி​யில் நடத்​தப்​பட்ட களஆய்​வின்​போது கலவரம் மூண்​டது. இதில் 4 பேர் உயிரிழந்​தனர். இந்நிலை​யில், இதுகுறித்து சம்பலின் சிவில் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் இந்திய தொல்​பொருள் ஆய்வு கழகம்​(ஏஎஸ்ஐ) தரப்​பில் சமர்ப்​பிக்​கப்​பட்ட மனு வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1920-ம் ஆண்டு சம்பலின் மசூதி, ஏஎஸ்​ஐ​யின் வரலாற்று சின்னமாக அறிவிக்​கப்​பட்​டது. அப்போது … Read more

இந்தியா – ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வாங்க 3 நாடுகள் விருப்பம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன. இந்தியா​வும் ரஷ்யா​வும் இணைந்து பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை தயாரித்​துள்ளன. இந்தியா​வின் டிஆர்டிஓ ரஷ்யா​வின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்​கின்றன. இந்தியா​வின் பிரம்​மபுத்ரா மற்றும் ரஷ்யா​வின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்​மோஸ் என பெயரிடப்​பட்​டுள்​ளது. நிலம் மற்றும் போர்க்​கப்​பல்​களில் இருந்து இதை ஏவ முடி​யும். ஒலியைப் போல 3 மடங்கு … Read more

சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு … Read more

பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? – சமூக வலைதளத்​தில் வைரலாகும் புகைப்​படம்

பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர். இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் துணை … Read more

வக்பு வாரியத்துக்கான ரூ.10 கோடி மானியத்தை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர அரசு

மும்பை: வக்பு வாரியத்துக்கு கூடுதலாக ரூ.10 கோடி மானியம் வழங்க பிறப்பித்த உத்தரவை மகாராஷ்டிர திரும்ப பெற்றது. மகாராஷ்டிரா வக்பு வாரியத்தை வலுப்படுத்த 2024-25-ம் ஆண்டுக்கு ரூ.20 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரூ.2 கோடியை சிறுபான்மை வளர்ச்சி துறை கடந்த ஜூன் மாதம் வழங்கியது. இந்நிலையில், மேலும் ரூ.10 வழங்க வக்பு வாரியத்திடம் இருந்து வேண்டுகோள் வந்தது. இதையடுத்து ரூ.10 கோடி வழங்க மகாராஷ்டிர அரசு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. வக்பு வாரியத்தின் … Read more