பிரதமருக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பா? – சமூக வலைதளத்​தில் வைரலாகும் புகைப்​படம்

பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர். இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் துணை … Read more

வக்பு வாரியத்துக்கான ரூ.10 கோடி மானியத்தை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர அரசு

மும்பை: வக்பு வாரியத்துக்கு கூடுதலாக ரூ.10 கோடி மானியம் வழங்க பிறப்பித்த உத்தரவை மகாராஷ்டிர திரும்ப பெற்றது. மகாராஷ்டிரா வக்பு வாரியத்தை வலுப்படுத்த 2024-25-ம் ஆண்டுக்கு ரூ.20 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரூ.2 கோடியை சிறுபான்மை வளர்ச்சி துறை கடந்த ஜூன் மாதம் வழங்கியது. இந்நிலையில், மேலும் ரூ.10 வழங்க வக்பு வாரியத்திடம் இருந்து வேண்டுகோள் வந்தது. இதையடுத்து ரூ.10 கோடி வழங்க மகாராஷ்டிர அரசு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. வக்பு வாரியத்தின் … Read more

“அதானியை மோடி பாதுகாக்கிறார்… விவாதிக்க அச்சம்!” – ராகுல் காந்தி தாக்கு

வயநாடு: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறது” என்றார். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரியங்காவும் அவரது அண்ணன் ராகுல் காந்தியும் சனிக்கிழமை அங்கு சென்றனர். மலப்புரம்,கோழிக்கோடு உள்ளிட்ட … Read more

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் உறுதி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிர் அணியில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறும்போது, “டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது … Read more

பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம்: மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் சவுண்டாலா கிராமம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த கிராமத்தில் 1,800 பேர் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா போற்றப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் எவ்வித மோதலும் இல்லாத கிராமம் என்ற விருதை சவுண்டாலா பெற்றது. கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள … Read more

90 வயது முதியவரிடம் ரூ.1.15 கோடி மோசடி: குஜராத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ கும்பல் கைது

குஜராத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக மிரட்டி, ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஒரு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி என்றும், முதியவரின் பெயரில் 400 கிராம் போதைப் … Read more

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவிலிருந்து கோண்டியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பிந்த்ரவன தோலா கிராமத்துக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து கோண்டியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை … Read more

உ.பி சம்பல் மசூதி கள ஆய்வை நிறுத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜாமா மசூதியில் களஆய்வின் போது கலவரம் நடைபெற்று 4 பேர் பலியாகினர். இதனால், களஆய்வு நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் கீழே இந்துக் கோயில் இருந்ததா? என்பதை … Read more

பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண்ணுக்கு 6 மாதம் ஜாமீன்: மும்பை உயர்நீதிமன்ற கிளை வழங்கியது

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்துக்காக 6 மாதம் ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸா் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் நடத்திய சோதனையில் ஒரு கும்பல் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் ஒரு பெண் சுர்பி சோனி. அவரது பைகளில் 7 கிலோ கஞ்சா இருந்தது. கைது செய்யப்பட்டபோது அவர் 2 மாத கர்ப்பிணியாக … Read more

நவீன பொறியியலின் அற்புதம் புதிய பாம்பன் பாலம்: புகைப்படத்தை வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம் நவீன பொறியியலின் அற்புதம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 105 ஆண்டு பழமையான பாலத்துக்கு மாற்றாக நவீன பொறியியல் முறைப்படி புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இது, “நவீன கால பொறியியலின் அற்புதம்”. மேலும், இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் என்ற பெருமையையும் இப்பாலம் பெற்றுள்ளது. … Read more