நவீன பொறியியலின் அற்புதம் புதிய பாம்பன் பாலம்: புகைப்படத்தை வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம் நவீன பொறியியலின் அற்புதம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 105 ஆண்டு பழமையான பாலத்துக்கு மாற்றாக நவீன பொறியியல் முறைப்படி புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இது, “நவீன கால பொறியியலின் அற்புதம்”. மேலும், இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் என்ற பெருமையையும் இப்பாலம் பெற்றுள்ளது. … Read more