அதானி, சம்பல், மணிப்பூர் விவகாரங்கள்: 4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் 

புதுடெல்லி: அதானி, சம்பல், மணிப்பூர் விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. கடந்த 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், சம்பல் கலவரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் நாளில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. நவம்பர் 26-ம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் … Read more

வாடகைத் தாயாக இருக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

ஹைதராபாத்: வாடகை தாயாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு சென்ற 25 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஒடிசாவைச் சேர்ந்த 25 வயதான திருமணமான பெண் ஒருவரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள், வாடகை தாயாக இருக்க ஒப்புக்கொண்டால் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரும், அவரது கணவரும், … Read more

முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என பேசிய கர்நாடக துறவி மீது வழக்கு

பெங்களூரு: முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவின் விஸ்வ வொக்கலிகா மகா சமஸ்தான மடத்தின் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் விவசாயிகள் பலரின் நிலங்களுக்கு உரிமை கோரி வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடந்த செவ்வாய்கிழமை பாரதிய கிசான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குமார சந்திரசேகரநாதா, “விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராட … Read more

உலகம் முழுவதும் ஒளிரும் இந்திய கலாச்சாரம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அண்மையில் பயணம் மேற்கொண்ட நாடுகளின் வீடியோ தொகுப்பு பிரதமரின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆஸ்திரியாவில் வந்தே மாதரம் பாடல், போலந்து, ரஷ்யா, பூடானில் கர்பா நடனம், பூடானில் இந்திய கலாச்சார நடனம், சிங்கப்பூரில் … Read more

மகாராஷ்டிர முதல்வர் யார் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும்: ஏக்நாத் ஷிண்டே

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, … Read more

சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டியதாக வழக்கு: தொல்​பொருள் ஆய்வுத் துறை​க்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் அஜ்மீரில் 12-ம் நூற்​றாண்​டில் கட்டப்​பட்டது காஜா மொய்​னுதீன் சிஷ்தி தர்கா. இந்த தர்கா​வுக்கு நாடு முழு​வ​தி​லும் இருந்து முஸ்​லிம்கள் அதிக எண்ணிக்கை​யில் வந்து செல்​கின்​றனர். தர்கா இருந்த இடத்​தில் சங்கட் மோர்ச்சன் மஹாதேவ் எனும் சிவன் கோயில் இருந்​த​தாகப் பல ஆண்டு​களாகப் புகார் உள்ளது. இதை குறிப்​பிட்டு கடந்த 2022-ம் தேதி காங்​கிரஸ் முதல்​வராக இருந்த அசோக் கெலாட்​டிடம் முதல் முறையாக புகார் அளிக்​கப்​பட்​டது. மகாரானா பிரதாப் சேனா எனும் அமைப்​பினர் அளித்த … Read more

பிஜியில் 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் வகுப்புகள்: இந்திய அரசு நிதி உதவியுடன் துவக்கம்

புதுடெல்லி: பிஜி நாட்டில் சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்திய அரசின் நிதி உதவியுடன் நேற்று தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பிஜி நாட்டிலுள்ள இந்திய சமூகத்தில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தமிழ்நாட்டிலிருந்து பிஜிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களது சந்ததியினர் சார்பில் பிஜியில் நீண்டகாலமாக ஒரு கோரிக்கை எழுந்து வந்தது. இதில் அவர்கள் பிஜியில் நின்று போன தமிழ் வகுப்புகளை … Read more

ஆட்கடத்தல் வழக்கு: டெல்லி, உ.பி. உட்பட 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: ஆட்கடத்தல் வழக்கில் 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த பலரை மத்திய அரசு மீட்டுள்ளது. இந்நிலையில் இந்த மோசடி … Read more

பெங்களூருவில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட லஷ்கர் தீவிரவாதி ருவாண்டாவில் கைது

பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ருவாண்டாவில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர். இவர், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்வதில் முக்கிய நபராக இருந்தவர். பயங்கரவாத தொடர்பான குற்றங்களுக்காக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) … Read more

இண்டியா கூட்டணியின் ஒற்றுமை வெற்றி பெற்றுள்ளது: 4-வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன் பெருமிதம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்வார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 34, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் … Read more