பெங்களூருவில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட லஷ்கர் தீவிரவாதி ருவாண்டாவில் கைது

பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ருவாண்டாவில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர். இவர், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்வதில் முக்கிய நபராக இருந்தவர். பயங்கரவாத தொடர்பான குற்றங்களுக்காக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) … Read more

இண்டியா கூட்டணியின் ஒற்றுமை வெற்றி பெற்றுள்ளது: 4-வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன் பெருமிதம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்வார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 34, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் … Read more

ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக். காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரும் இவரது அமைப்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்தது. தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் டெல்லி திஹார் சிறையில் உள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையதுவின் … Read more

சம்பல் பகுதியில் ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் சர்ச்சை பேச்சு: 800 பேர் மீது வழக்குப் பதிவு

சம்பல் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில், ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்எல்ஏவின் மகன் ஆகியோர் பேசியுள்ளனர் என்று போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 700 முதல் 800 நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் … Read more

அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி வயநாடு எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்பு

புதுடெல்லி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி (52), அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சோனியா, ராகுல் காந்தி ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது எம்.பி.யாக பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். இது, அசாதாரணமான நிகழ்வாக கருதப்படுகிறது. தீவிர … Read more

டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் காயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 11.48 மணிக்கு நடந்துள்ளது. இதனை டெல்லி தீயணைப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு … Read more

கலாம் 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

விசாகப்பட்டணம்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது. அணு சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் இரண்டாவது அணு சக்தி … Read more

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு – நிகழ்வில் கார்கே, ராகுல், உதயநிதி பங்கேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களைக் கைப்பற்றியது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், … Read more

ரயிலில் எத்தனை நாளுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படும் தெரியுமா? – அமைச்சரே சொல்லிய தகவல்

Indian Railways: ரயில்களில் வழங்கப்படும் பெட்ஷீட்கள், போர்வைகள், தலையணைகள் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்பது குறித்து ரயில்வே துறை அமைச்சரே விளக்கமளித்துள்ளார். 

வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல்

புதுடெல்லி: தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம் என டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி இது குறித்து செய்தியாளர்களைச் … Read more