கலாம் 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

விசாகப்பட்டணம்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது. அணு சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் இரண்டாவது அணு சக்தி … Read more

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு – நிகழ்வில் கார்கே, ராகுல், உதயநிதி பங்கேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களைக் கைப்பற்றியது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், … Read more

ரயிலில் எத்தனை நாளுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படும் தெரியுமா? – அமைச்சரே சொல்லிய தகவல்

Indian Railways: ரயில்களில் வழங்கப்படும் பெட்ஷீட்கள், போர்வைகள், தலையணைகள் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்பது குறித்து ரயில்வே துறை அமைச்சரே விளக்கமளித்துள்ளார். 

வெடிப்புச் சம்பவம்: சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அமித் ஷா மீது டெல்லி முதல்வர் அதிஷி சாடல்

புதுடெல்லி: தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம் என டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி இது குறித்து செய்தியாளர்களைச் … Read more

ருவாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி

புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ருவாண்டா நாட்டுக்கு தப்பியோடிய சல்மான் ரெஹ்மான் கான் என்ற பயங்கரவாதியை இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட (2018-2022) சல்மான் ரெஹ்மான் கான், சிறையில் இருந்து வெளியே வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்த சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதங்கள், … Read more

வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் மத்திய அரசோடு இருக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். … Read more

சத்தமாக வெடித்த மர்ம பொருள்… தீயணைப்பு துறைக்கு போன் செய்தது யார்…? டெல்லியில் தொடரும் மர்மம்

Delhi Explosion Latest News Updates: டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் மர்ம பொருள் ஒன்று மிக சத்தமாக வெடித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதமும் இதேபோல் மர்ம பொருள் ஒன்று இதே பகுதியில் வெடித்தது.

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் … Read more

நாடாளுமன்றத்தில் அமளி – இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், … Read more

தொடரும் மகாராஷ்டிர முதல்வர் சஸ்பென்ஸ்!- அமித் ஷாவை சந்திக்கும் மூன்று தலைவர்கள்

புதுடெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்றளவும் நீடித்துவரும் சூழலில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுடன் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி-யின் அஜித் பவார் ஆகியோர் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமோக வெற்றி மட்டும் போதுமா? 288 தொகுதிகளை கொண்ட … Read more