சத்தமாக வெடித்த மர்ம பொருள்… தீயணைப்பு துறைக்கு போன் செய்தது யார்…? டெல்லியில் தொடரும் மர்மம்

Delhi Explosion Latest News Updates: டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் மர்ம பொருள் ஒன்று மிக சத்தமாக வெடித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதமும் இதேபோல் மர்ம பொருள் ஒன்று இதே பகுதியில் வெடித்தது.

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் … Read more

நாடாளுமன்றத்தில் அமளி – இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், … Read more

தொடரும் மகாராஷ்டிர முதல்வர் சஸ்பென்ஸ்!- அமித் ஷாவை சந்திக்கும் மூன்று தலைவர்கள்

புதுடெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்றளவும் நீடித்துவரும் சூழலில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுடன் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி-யின் அஜித் பவார் ஆகியோர் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமோக வெற்றி மட்டும் போதுமா? 288 தொகுதிகளை கொண்ட … Read more

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது. இந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப், … Read more

வக்பு நாடாளுமன்ற கூட்டு குழு பதவிக்காலம் நீட்டிப்பு

வக்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார். வக்பு வாரியங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அந்த திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு இந்த வக்பு மசோதாவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ஜெகதாம்பிகா பால் … Read more

சம்பல் மசூதி ஆய்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: ஜமாத் எ உலாமா ஹிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​துள்ளது. இங்கு விஷ்ணு​வின் கடைசி அவதா​ரமான கல்கி​யின் கோயில் இருந்தது என சம்பல் நீதி​மன்​றத்​தில் மனு அளிக்​கப்​பட்​டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசா​ரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்​தில் ஆய்வு செய்ய உத்தர​விட்​டார். அதன்படி மசூதி​யில் நடை பெற்ற ஆய்வு மீண்​டும் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடைபெற்​றது. அப்போது ஏற்பட்ட வன்முறை​யில் … Read more

அதானி மீதான புகாரில் திருப்பம்: அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை என குழுமம் விளக்கம்

புதுடெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியது. அப்போது அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, அதானி விவகாரம், மணிப்பூர் நிலவரம், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றம் … Read more

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி … Read more

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார்

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். … Read more