சம்பல் மசூதி ஆய்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: ஜமாத் எ உலாமா ஹிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​துள்ளது. இங்கு விஷ்ணு​வின் கடைசி அவதா​ரமான கல்கி​யின் கோயில் இருந்தது என சம்பல் நீதி​மன்​றத்​தில் மனு அளிக்​கப்​பட்​டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசா​ரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்​தில் ஆய்வு செய்ய உத்தர​விட்​டார். அதன்படி மசூதி​யில் நடை பெற்ற ஆய்வு மீண்​டும் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடைபெற்​றது. அப்போது ஏற்பட்ட வன்முறை​யில் … Read more

அதானி மீதான புகாரில் திருப்பம்: அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை என குழுமம் விளக்கம்

புதுடெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியது. அப்போது அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, அதானி விவகாரம், மணிப்பூர் நிலவரம், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றம் … Read more

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி … Read more

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார்

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். … Read more

ஆந்திராவில் 26 ஆண்டுகளுக்குப் பின் கொலை குற்றவாளி கைது: காட்டிக்கொடுத்த திருமண பத்திரிகை

சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குடிபண்டா மண்டலம், திண்ணஹட்டிகி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி. இவர் தனது மனைவி மீது தீவிர சந்தேகம் கொண்டிருந்தார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு மனைவி மற்றும் மகனுடன் தசரா பூஜையில் பங்கேற்க கோயிலுக்கு சென்றார். அப்போது மனைவி கோயிலை … Read more

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு

புதுடெல்லி: இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பதற்றத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம். இந்த முன்னேற்றம், இந்தப் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று … Read more

அஜ்மீர் தர்கா விவாகார வழக்கு: மூன்று தரப்புகளும் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராஜஸ்தானின் புகழ் வாய்ந்த அஜ்மீர் தர்கா, இந்துக்களின் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அஜ்மீர் சிவில் ஷெஷன்ஸ் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அஜ்மீரில் சூபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஷ்தியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வருகை புரிவது வழக்கம். இந்த தர்காவானது அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாகப் புகார் உள்ளது. ராஜஸ்தானின் … Read more

வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரத்தில் ஐ.நா தலையிட மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், “வங்கதேசத்தில் இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற தாக்குதல்கள் மனித குலத்துக்கு … Read more

“மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம்” – மகாராஷ்டிர முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

தானே: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தானே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் தற்காலிக முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, “மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். தேர்தல் … Read more

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், பாஜகவைச் சேர்ந்த மீரட் தொகுதி உறுப்பினர் அருண் கோவில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க தகாததாக அவை இருப்பதாகவும் குற்றம் … Read more