அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், பாஜகவைச் சேர்ந்த மீரட் தொகுதி உறுப்பினர் அருண் கோவில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க தகாததாக அவை இருப்பதாகவும் குற்றம் … Read more

அதானியை கைது செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்; சோரோஸின் திரைக்கதை என பாஜக சாடல்

புதுடெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானி மீதனான குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதானி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கருத்து மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் பிற அலுவல்களை ஒத்துவைத்து விட்டு, … Read more

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி – இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், பாஜகவைச் சேர்ந்த மீரட் தொகுதி உறுப்பினர் அருண் கோவில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க தகாததாக அவை … Read more

கேரளா ரியல் எஸ்டேட் பெண் புரோக்கர் கொலை… கள்ளக்காதல் ஜோடி சிக்கியது எப்படி?

Kerala murder | கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பெண்ணை, கள்ளக்காதல் ஜோடி ஒன்று திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு 10 இடங்கள் ‘மிஸ்’ ஆக ராஜ் தாக்கரே கட்சி காரணமானது எப்படி?

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 10 தொகுதிகள் இழக்க, அக்கட்சி காரணமாகிவிட்டது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான 288 தொகுதிகளில் மகாயுதி 236-இல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதை எதிர்த்த மகா விகாஸ் அகாடி (எம்விஏ) வெறும் 48 பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. மகாயுதியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 57 மற்றும் அஜித் பவாரின் … Read more

மகாராஷ்டிரா, உ.பி.யில் பாஜக வெற்றிக்கு சாதகமான முஸ்லிம் வாக்குகள் பிரிவு!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு முஸ்லிம் வாக்குகளின் பிரிவு சாதகமாகி உள்ளது. மேலும், அக்கட்சிக்கு இந்துத்துவா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரமும் கூடுதல் பலனை அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் 12 சதவீதமாக உள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளில் 38-ல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த 38 தொகுதிகளில் பாஜக கடந்த 2019 தேர்தலில் 11 தொகுதிகளில் … Read more

கேரளாவில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை கொச்சி சென்று கொண்டிருந்தது. திருச்சூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியது. பின்னர் அங்கு சாலையோரம் கூடாரம் அமைத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது. … Read more

மும்பை தீவிரவாத தாக்குதல் 16-வது நினைவு தினம்: அஜ்மலை கொல்ல நினைத்ததாக உயிர் பிழைத்த பெண் பேட்டி

மும்பை தீவிரவாத தாக்குதலின்போது அஜ்மல் கசாபை கொல்ல நினைத்தேன், ஆனால் அப்போது எனக்கு வயது 9 என உயிர் பிழைத்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி (26/11) கடல் மார்கமாக மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் , சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் டிரைடன்ட், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி … Read more

ஜெயித்தால் ஓகே; தோற்றால் குறைசொல்வதா? – வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர், சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு … Read more

இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கும்பகோணம்: பாபநாசம் அருகே முன்​விரோத தகராறில் இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்​பகோணம் நீதி​மன்றம் நேற்று தீர்ப்​பளித்​தது. மேலும், 3 பேர் விடுதலை செய்​யப்​பட்​டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்​ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்​வ​மணி​யின் இருசக்கர வாகனத்தை, மருத்​துவக்​குடி பாரதி​யார் நகரைச் சேர்ந்த சிலம்​பரசன் ​(35) என்பவர் வாங்​கிச் … Read more