கடந்த 10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு

கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 ஐஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 ஐஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விஆர்எஸ் திட்டத்தின்கீழ் … Read more

இஸ்லாமியர்களால் வென்ற பாஜக… தாக்கம் செலுத்திய 38 தொகுதிகள் – மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

National Latest News: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றியில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 38 தொகுதிகள் செலுத்திய தாக்கம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: உண்ணாவிரதம் இருந்த டல்லேவால் கைதுக்கு கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்கேஎம் என்பி) சார்பில் அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்கத் தலைவர் டல்லேவால் கைதை கண்டிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியனும் பங்கேற்றார். முன்னதாக, டெல்லியில் ஆந்திர பவன் வளாகத்தில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு எஸ்கேஎல்என்பி அமைப்பினர் மலரஞ்சலி செலுத்தினர். இதில் தமிழக விவசாயிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியனும் கலந்து கொண்டார். இதன்பிறகு … Read more

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே – அடுத்தது என்ன?

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இருந்தார். பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் … Read more

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: “நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும்.” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு உரையுடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இதே நாளில் கடந்த 1949-ல் … Read more

அது வேற, இது வேற… – வெறும் 155 ஓட்டுகளை பெற்ற ‘இன்ஃப்ளூயன்சர்’

தேர்தல்களில் பிரபலமானவர்கள் எதிர்பாராத தோல்வியைத் தழுவுவது வழக்கமான கதைதான். அந்த வகையில், அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடிகரும், இந்தி பிக்பாஸ் போட்டியாளரும், பிரபல ‘இன்ஃப்ளூயன்ச’ருமான அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார். 18 சுற்றுகள் எண்ணப்பட்ட பிறகும் 200 ஓட்டுகளைக்கூட அவர் தொடவில்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது. குறைவான வாக்குகளைப் … Read more

திருப்பதி கலப்பட நெய் விவகாரம்: 2-வது நாளாக சிபிஐ விசாரணை

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வு குழு திருமலை, திருப்பதி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை விநியோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, முதலில் ஆந்திர அரசு சிறப்பு ஆய்வு குழுவினை … Read more

உ.பி., பாலத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது ஆற்றில் கார் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உ.பி.​யில் உடைந்த பாலத்​தில் இருந்து கார் ஆற்றில் விழுந்​ததால் 3 பேர் உயிரிழந்​தனர். கூகுள் மேப் உதவி​யுடன் சென்​ற​தால் இந்த விபத்து நேரிட்​டதாக தெரிய​வந்​துள்ளது. உ.பி.​யின் பரேலி மாவட்டம் பரித்​பூரில் ராம்​கங்கா ஆறு செல்​கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்​தின் நடுப்​பகுதி சமீபத்திய மழை வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்​கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்​றது. இந்நிலை​யில் அந்த கார் உடைந்த பாலத்​தில் இருந்து ஆற்றில் … Read more

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயில் ரோப் கார் திட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு: போலீஸாருடன் மோதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா என்ற இடத்தில் வைஷ்ணவ தேவி மலைக் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 80 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். வயதான பக்தர்கள் கோயிலுக்கு எளிதில் செல்வதற்காக இங்கு ரோப் கார் திட்டம் ரூ.250 கோடி செலவில் அமைக்க வைஷ்ணவ தேவி கோயில் … Read more

டெல்லி வானிலை: ஒருபக்கம் மோசமான காற்று.. மறுபுறம் கடுமையான குளிர்

Delhi Weather Latest News: பனிமூட்டம், குளிர் காற்று.. 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை காரணமாக டெல்லியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.