ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயில் ரோப் கார் திட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு: போலீஸாருடன் மோதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா என்ற இடத்தில் வைஷ்ணவ தேவி மலைக் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 80 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். வயதான பக்தர்கள் கோயிலுக்கு எளிதில் செல்வதற்காக இங்கு ரோப் கார் திட்டம் ரூ.250 கோடி செலவில் அமைக்க வைஷ்ணவ தேவி கோயில் … Read more

டெல்லி வானிலை: ஒருபக்கம் மோசமான காற்று.. மறுபுறம் கடுமையான குளிர்

Delhi Weather Latest News: பனிமூட்டம், குளிர் காற்று.. 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை காரணமாக டெல்லியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.

குளிர்கால கூட்டத் தொடர் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கூடிய பிறகும், அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் கலவரம் ஆகியவை … Read more

அதானியின் ரூ.100 கோடி வேண்டாம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

தொழிலதிபர் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதானியிடமிருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானித்தோம். இதற்கு அதானி குழுமம் ரூ.100 கோடி … Read more

குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்​டும்: சிறையில் உள்ள ரஷீத் எம்.பி. நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: காஷ்மீரின் பிரி​வினைவாத அரசி​யல்​வாதி ஷேக் அப்துல் ரஷீத் (இன்​ஜினியர் ரஷீத்). தீவிர​வா​தி​களுக்கு நிதி உதவி செய்த புகாரின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்​யப்​பட்​டார். மக்களவை தேர்​தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். இந்நிலை​யில், “நாடாளு​மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்​டும்” என டெல்லி முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதைப் பரிசீலிக்க தேசிய புலனாய்வு ​முகமைக்கு … Read more

மகாராஷ்டிராவில் 3-வது முறையாக எம்எல்ஏ ஆன தமிழர்! – யார் இந்த ‘கேப்டன்’ தமிழ்ச் செல்வன்?

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தமிழ்ச் செல்வன் மராட்டிய மண்ணில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். மராட்டிய அரசியல் களத்தில் தனக்கென முத்திரை படைத்திருக்கும் இவர், மும்பையில் உள்ள சயான் கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். வெளிநாட்டுக்கு செல்லும் கனவோடு மும்பைக்கு சென்று ஏமாற்றப்பட்டவர், தற்போது அம்மாநிலத்தின் அமைச்சராகலாம் என்று பேசப்படும் அளவுக்கு தனது உழைப்பால் உயர்ந்திருக்கிறார். அவரை பற்றி காண்போம். நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை … Read more

“பிஹாரிலும் சூடான் நிலைதான்!” – தேர்தல் தோல்விக்குப் பின் பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: பிஹார் ஒரு தோல்வியடைந்த மாநிலம் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோம் விமர்சனம் செய்துள்ளார். பிஹாரை சூடானுடன் அவர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பிஹாரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இமாம்கஞ்ச் தொகுதியில் இவரது கட்சி … Read more

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா – தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு

மும்பை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நானா படோல் விலகி உள்ளார். மகாராஷ்டிராவின் கோந்தியா பகுதியை சேர்ந்த நானா படோல் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவில் அவர் இணைந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் அவர் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். கடந்த 2021-ம் ஆண்டில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவராக நானா படோல் பதவியேற்றார். அவரது தலைமையில் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவின் … Read more

அந்தமான் நிகோபார் அருகே 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட 6 ஆயிரம் கிலோ எடைகொண்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை, கப்பலில் இருந்த 6 மியான்மர் நாட்டவர்களை கைது செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், “கடந்த 23ம் தேதி இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது போர்ட் பிளேயரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரன் தீவு … Read more

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர ஜேபிசி அமைக்கப்பட வேண்டும்: கார்கே

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம். சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை … Read more