அந்தமான் நிகோபார் அருகே 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட 6 ஆயிரம் கிலோ எடைகொண்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை, கப்பலில் இருந்த 6 மியான்மர் நாட்டவர்களை கைது செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், “கடந்த 23ம் தேதி இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது போர்ட் பிளேயரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரன் தீவு … Read more

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர ஜேபிசி அமைக்கப்பட வேண்டும்: கார்கே

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம். சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை … Read more

உத்தவ் பிரிவு சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்வு

மும்பை: சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) போட்டியிட்டது. இதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை … Read more

அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ வார்த்தைகளை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது. 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் பின்னோக்கிய விண்ணப்பத்துடன் சேர்க்கப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பினை வழங்கியது. “அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 368-ன் … Read more

‘கொள்கைகள் வேறானாலும் நம் அனைவருக்கும் நாடுதான் உயர்ந்தது’ – சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது என்றும் அது எப்போதும் சமூக ஆவணமாகவே தொடர வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை … Read more

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் … Read more

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்? ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள் ஃபார்முலா!

Maharashtra Latest Updates: சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

‘வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: “வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. ஆரம்பமே அதிரடி!

Parliament Winter Session Begins Today: குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. குளிரையும் மீறி அனல் பறக்கும்.. காத்திருக்கும் அரசியல் தலைவர்கள்.

உ.பி.யில் கலவரம் எதிரொலி: சம்பல் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை, இணைய சேவை துண்டிப்பு

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு … Read more