நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் – வீரர்களை பாராட்டிய காவ்யா மாறன்

சென்னை, 10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும். நடப்பு சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆப் போட்டிகளில் அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். … Read more

டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் – ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த கையோடு டி20 உலக கோப்பை திருவிழா ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை உலக கோப்பையை நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நியூயார்க் சென்றடைந்துவிட்டது. விராட் கோலி, ரிங்கு சிங் ஆகியோர் மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைய இருக்கின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் … Read more

2024 ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே – 3 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும். இந்த தொடரில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கும், அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததை … Read more

கம்பீர் லக்னோ அணியை கைவிட்டது எப்படி? ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்..!

கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் என்டிரியான இந்த ஆண்டே அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் வாகை சூடி அசத்தியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஷாரூக்கான், கம்பீர் இனி கேகேஆர் அணியை விட்டு போக்ககூடாது என்பதில் இன்னும் உறுதியான அன்பு கட்டளை இட்டுவிட்டாராம். அவர் அடுத்த 10 ஆண்டுக்கு கேகேஆர் அணியுடன் இருக்க வேண்டும் என சொல்லிவிட்ட அவர், அதற்காக பிளாங் செக் ஒன்றையும் கம்பீரிடம் கொடுத்துவிட்டாராம். இப்படியான அன்பு கட்டளையை மீறி எதுவும் … Read more

புரோ ஆக்கி லீக்; அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்ட இந்திய பெண்கள் அணி

ஆன்ட்வெர்ப், பெண்களுக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா அணி ஆட்டத்தில் முதல் பாதியின் முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. இதையடுத்து 3வது மற்றும் 4வது பாதியில் அர்ஜென்டினா அணி தலா ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர … Read more

'அப்படி பாக்காதீங்க…' தோல்விக்கு பின் காவ்யா மாறன் பேசியது என்ன தெரியுமா?

Kavya Maran SRH Dressing Room Video: 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமான முறையில் தொடங்கிய நிலையில், நேற்று அதே சென்னையில் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. 10 அணிகளும் கடுமையாக மோதிய இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது முறையாக … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; .கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் அமெரிக்காவின் ஜே.ஜே. வோல்ப் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே … Read more

2024 ஐ.பி.எல். – டபிள்யூ.பி.எல். தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்கு இடையே இவ்வளவு ஒற்றுமைகளா..?

சென்னை, கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசனில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவை விவரம் பின்வருமாறு:- 1. இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளிலுமே எதிர் எதிர் அணிகளின் கேப்டன்களாக இந்தியா – ஆஸ்திரேலியாவை சேர்ந்த … Read more

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியது என்ன..?

சென்னை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரசல் 3 … Read more

IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ? – முழு விவரம்

IPL 2024 Recap: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் 70 லீக் சுற்று போட்டிகள், 4 பிளே ஆப் சுற்று போட்டிகள் என மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றது. தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more