பிளே ஆப் சென்றது ஆர்சிபி… தோல்வியுடன் விடைபெறுகிறாரா தோனி – வெளியேறிய சிஎஸ்கே!

RCB vs CSK Match Highlights: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான பரபரப்பான லீக் போட்டியில் வெற்றி பெற்று நான்காவது அணியாக ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் சிஎஸ்கே அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடலாம் என்ற நிலையில், வெறும் 191 ரன்களை மட்டும் எடுத்து சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.  … Read more

Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர் – நோஸ்கட் செய்த ரோகித்

ஐபிஎல் 2024 தொடர் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப்  இடத்தை கன்பார்ம் செய்துவிட்ட நிலையில் நான்காவது இடத்துக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு மோத இருக்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் … Read more

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்

ரோகித் சர்மா அதிருப்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டதில் ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறிவிட்டு, ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்களுக்கான வர்த்தகம் நிறைவடைந்த தேதிக்குப் பிறகு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ். அத்துடன் குஜராத் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை … Read more

RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்… ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

RCB vs CSK Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டி மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் இருக்கிறது எனலாம். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு வர காரணம், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இரு அணிகளும் அதற்காக இன்று மோதுகிறது.  … Read more

உள்நாட்டு கால்பந்து போட்டியில் அடுத்த ஆண்டு வரை ஆடுவேன் – சுனில் சேத்ரி பேட்டி

புதுடெல்லி, இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 39 வயது சுனில் சேத்ரி, அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் சுனில் நேத்ரி காணொலி மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எனது உடல் நலம் காரணமாக நான் ஓய்வு முடிவை எடுக்கவில்லை. நான் இன்னும் நல்ல … Read more

2027-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடக்கிறது

பாங்காக், சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027-ம் ஆண்டுக்கான 10-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியை நடத்த பிரேசில் தனியாகவும், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்து இருந்தன. கூட்டாக நடத்த முயற்சித்த அமெரிக்கா, மெக்சிகோ நாடுகள் கடந்த மாதமும், தென்ஆப்பிரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் … Read more

RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: கடந்த வியாழன் அன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இடத்தைப் உறுதிப்படுத்தியது. போட்டி வாஷ்அவுட் ஆனதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இதன் மூலம் ஹைதராபாத் அணி 15 … Read more

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் இடைநீக்கம்

புதுடெல்லி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். அவர் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையினர், தன்னிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வருவதற்கு வசதியாக எங்கு இருக்கிறேன் என்ற தகவலை கடந்த ஒரு ஆண்டில் 3 முறை அளிக்க தவறிவிட்டார். இதனையடுத்து பிரவீன் … Read more

மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய … Read more

ராகுல், பூரன் அரைசதம்: மும்பை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த லக்னோ

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை … Read more