விராட் கோலியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் அவரை நான் மதிக்கிறேன் – பாகிஸ்தான் வீரர்

டப்ளின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 51 ரன்கள் … Read more

தோனிக்கு சென்னையில் கோயில்…! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!

Mahendra Singh Dhoni IPL 2024: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே தோனிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பிணைப்பு பற்றி கூறும்போது ஒருமுறை இப்படிச் சொல்லியிருந்தார்.”தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்தை கொண்டாடும் வரிசையில் தற்போது தோனியும் இருக்கிறார்” என கூறியிருந்தார். இது 100 சதவீதம் உண்மை எனலாம். கிரிக்கெட் வீரர்கள் என்றாலே தமிழ்நாடு என்றில்லை இந்தியா முழுவதுமே அவர்கள் மீதான மோகம் ஜாஸ்திதான். தமிழ்நாட்டிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஏன் வெளிநாட்டு வீரர்களையும் கொண்டாடும் ரசிகர்கள் … Read more

இனி டாஸ் கிடையாது! கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய மாற்றம்!

ஜெய் ஷாவின் பரிந்துரைகளின்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2024-25 சீசனுக்கான உள்நாட்டு கிரிக்கெட்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய உள்ளது. அடுத்த சீசன் சிவப்பு மற்றும் வெள்ளை பந்துப் போட்டிகளுடன் தொடங்கும் என்றும் சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே டிராபி ஆகிய இரண்டும் தொடர்களும் துலீப் டிராபி, இரானி கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பையின் முதல் ஐந்து போட்டிகளுக்குப் பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் பால் போட்டியுடன் உள்நாட்டு கிரிக்கெட்டை … Read more

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் பிசிசிஐ விரைவில் இந்த பதவிக்கு விண்ணப்பங்களை ஏற்க உள்ளது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, டிராவிட் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உறுதிப்படுத்தினார். அவரை தவிர வேறு யாரு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நாங்கள் நீண்ட கால பயிற்சியாளரைத் தேடி வருகிறோம். குறைந்தது மூன்று ஆண்டுகள் பதவியில் … Read more

ரஜத் படிதார் அரைசதம்… டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

பெங்களூரு, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி , … Read more

ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி

சென்னை, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் … Read more

பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

சென்னை அணி அபார பந்துவீச்சு…142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

சென்னை, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை … Read more

CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!

CSK vs RR Match : சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி, 141 ரன்களை எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 18.2 ஓவர்களில் மேட்சை முடித்து வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் vs சென்னை: ஐபிஎல் போட்டியின் … Read more

மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ? மனம் திறந்த சுனில் நரைன்

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கொல்கத்தா அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வரும் சுனில் நரைன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சுனில் நரைன் பேட்டிங்கில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 461 ரன்களும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.தொடக்க … Read more